Meiyazhagan: யாரோ இவன் யாரோ.. 2 ஆண்டுகளை நிறைவு செய்த மெய்யழகன் திரைப்படம்!
2 Years Of Meiyazhagan: கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமியின் கூட்டணியில் மிகவும் சிறப்பாக உருவான படம்தான் மெய்யழகன். இந்த படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கியிருந்த நிலையில், பீல் குட் கதைக்களத்தில் வெளியானது. அந்த விதத்தில் இப்படமானது வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பீல் குட் கதைகளை இயக்கும் இயக்குநர் என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் இயக்குநர் சி.பிரேம் குமார் (C Prem Kumar). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை மொத்தம் 2 படங்கள் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், இந்த இரு படங்களும் பீல் குட் என்ற கதைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்த இவர் 96 என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். இப்படத்திற்கு பின் இவர் இயக்கிய படம்தான் மெய்யழகன் (Meiyazhagan). இதில் கார்த்தி (Karthi) மற்றும் அரவிந்த் சுவாமி (Aravind Swamy) இணைந்து நடித்திருந்தனர். இதில் நடிகையாக ஸ்ரீதிவ்யா (Sri Divya)நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் செப்டம்பர் 27ம் தேதியில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
திரையரங்குகளில் மக்களின் பார்வைக்கு எட்டப்படாத இப்படம், ஓடிடிக்கு வந்த பிறகு பெரும் புகழை அடைந்தது. அந்த விதத்தில் இப்படமானது வெளியாகி இன்றுடன் (27/09/2026) கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் பதிவை படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: சிக்மா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!
மெய்யழகன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகளை கடந்தது குறித்து படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் பதிவு:
மெய்யழகன்
பேரன்பின் பெருமழையில்
2ஆம் ஆண்டு 🤍#2YearsofMeiyazhagan@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl #Jyotika @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash @ActorSarann #GovindVasantha #MahendiranJayaraju #Rajeevan @R_Govindaraj @subhaskaar… pic.twitter.com/HyHvTSjvCw— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 27, 2026
மெய்யழகன் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடாதது ஏன்?:
இயக்குநர் சி பிரேம் குமாரின் இயக்கத்திலும், ஜோதிகா சூர்யாவின் தயாரிப்பிலும் வெளியான படம்தான் மெய்யழகன். இந்த படத்தின் முக்கிய தூணாக இருப்பதே கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமிதான். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே போன்ற பிரபலங்கள் இணைந்து பணியாற்றியிருந்தனர். இப்படமானது கிராமப்த்தில் வாசித்த அரவிந்த் சுவாமி குடும்ப பிரச்சனையின் காரணமாக தனது சொந்த வீட்டை விட்டுவிட்டு, குடும்பத்தோடு சென்னை சென்றுவிடுவார். பல வருடத்திற்கு பின் தனது தங்கையின் கல்யாணத்தின்போது, அடையாளம் தெரியாத ஒரு உறவினரை சந்திப்பார்.
இதையும் படிங்க: ஹுக்கும்…. ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லான்ச் எப்போதும் தெரியுமா? – அப்டேட் இதோ!
அந்த உறவினருக்கும் தனக்கும் எப்படிப்பட்ட உறவு என்பதை அவர் தேர்ந்துகொள்வதே இப்படத்தின் மைய கருவாகும். இப்படமானது மெதுவாக மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு நிலையுடனும் கொண்டுபோகப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் இப்படம் ஓடாததற்கான காரணம் பல நெகட்டிவ் விமர்சனங்கள் என சொல்லலாம். ஆனால் தற்போது இப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும், மக்கள் கொண்டாடிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.