ஒருவருக்கொருவர் அன்பையும்… – அனிருத் – காவியா திருமணத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து! –
PM Modi Wedding Wishes to Anirudh and Kaviya Maran : அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21, 2026 இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையுலக அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இதனையடுத்து அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் (Kavya Maran) ஆகியோரது திருமணம் கடந்த நவம்பர் 1, 2026 அன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அனிருத் – காவியா திருமணத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
இந்த நிலையில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21, 2026 இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையுலக அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக காவ்யா மாறனின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள் பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : தனது 30-வது படத்தில் தீவிரமாக கவனம் செலுத்தும் நடிகர் கார்த்தி… வைரலாகும் தகவல்!
இந்த நிலையில் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21, 2026 இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி கடிதம் மூலம் புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தில், காவியா மற்றும் அனிருத் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் துவங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவர்களின் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும், தம்பதியினர் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் அதிகரித்துக் கொண்டு நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும், குடும்பத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க : ஆந்திரா சாப்பாடு என்றால் அனிருத்துக்கு ரொம்ப பிடிக்குமாம்! சென்னையில் அவருக்கு மிகவும் பிடித்த உணவகம் எது தெரியுமா?
தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள திருமணக் கொண்டாட்டங்களுக்கு தன்னை அழைத்ததற்காக நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மீண்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி கடந்த நவம்பர் 5, 2026 தேதியிட்டு எழுதியுள்ள இந்தக் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் – காவியா திருமணத்திற்கு பிரதமர் நேரடியாக வாழ்த்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.