Tamil Nadu Weather forecast: கார்த்திகை தீப திருநாளில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் வருகிற நவம்பர் 27, 2026 அன்று வரையிலான வானிலை அறிவிப்புகளை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கார்த்திகை தீப திருநாளான நவம்பர் 24, 2026 அன்று 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 21 : தமிழகத்தில் வரும் 2026 நவம்பர் 23 முதல் 27 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 24, 2026 அன்று கார்த்திகை தீபத் திருநாளன்று (Karthigai Deepam) சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் வருகிற நவம்பர் 27, 2026 அன்று வரையிலான வானிலை அறிவிப்புகளை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 23, 2026 திங்கள்கிழமை முதல் நவம்பர் 27, 2026 வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நவம்பர் 21, 2026 இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியா?”.. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!




அதனைத் தொடர்ந்து நவம்பர் 22, 2026 நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவம்பர் 22, 2026 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கார்த்திகை தீப நாளில் 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24, 2026 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 25, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “முதலமைச்சருக்கு அரோகரா முழக்கம்!”.. திருச்செந்தூர் விழா விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
நவம்பர் 26 மற்றும் நவம்பர் 27 கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மேலும் நவம்பர் 26, 2026 அன்று கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நவம்பர் 27, 2026 அன்று நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.