கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலை செல்லும் பக்தர்களே.. 8,012 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
Tiruvannamalai Karthigai Deepam Special Buses : திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த 8012 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலைக்கு 8,012 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 7,753 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள், நவம்பர் 22- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மண்டலத்தில் 195 சிறப்பு பேருந்துகளும், கடலூர் மண்டலத்தில் 101 சிறப்பு பேருந்துகளும், திருவண்ணாமலை மண்டலத்தில் 566 சிறப்பு பேருந்துகளும், வேலூர் மண்டலத்தில் 205 பேருந்துகளும், காஞ்சிபுரம் மண்டலத்தில் 35 பேருந்துகளும், திருவள்ளூர் மண்டலத்தில் 30 சிறப்பு பேருந்துகளும் என 1132 என சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விழுப்புரம் மண்டலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதேபோல, திங்கட்கிழமை ( நவம்பர் 23- ஆம் தேதி) பௌர்ணமி நாளையொட்டி, விழுப்புரம் மண்டலத்தில் இருந்து 284 சிறப்பு பேருந்துகளும், கடலூர் மண்டலத்தில் 180, திருவண்ணாமலை மண்டலத்தில் 802, வேலூர் மண்டலத்தில் 458, காஞ்சிபுரம் மண்டலத்தில் 82, திருவள்ளூர் மண்டலத்தில் 45 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1878 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருநாள் அன்று ( நவம்பர் 24- ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மண்டலத்தில் 500 சிறப்பு பேருந்துகள்.
மேலும் படிக்க: செஞ்சி சிறுமி வழக்கு! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் 10 பேர்.. குற்றவாளியை நெருங்கும் போலீசார்?
கடலூர் மண்டலத்தில் சிறப்பு பேருந்துகள்
கடலூர் மண்டலத்தில் 201 சிறப்பு பேருந்துகள், திருவண்ணாமலை மண்டலத்தில் 1,212 சிறப்பு பேருந்துகள், வேலூர் மண்டலத்தில் 818, காஞ்சிபுரம் மண்டலத்தில் 152, திருவள்ளூர் மண்டலத்தில் 82 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,055 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோல, நவம்பர் 25- ஆம் தேதி ( புதன்கிழமை) விழுப்புரம் மண்டலத்தில் 332 சிறப்பு பேருந்துகளும், திருவண்ணாமலை மண்டலத்தில் 874 சிறப்பு பேருந்துகளும், கடலூர் மண்டலத்தில் 231 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அத்துடன், வேலூர் மண்டலத்தில் 345 சிறப்பு பேருந்துகளும்,
எந்தெந்த பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவள்ளூர் மண்டலத்தில் 63 சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரம் மண்டலத்தில் 102 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 1,947 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட நான்கு நாட்களில் மொத்தம் 8,012 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவை கோயம்பேடு, அடையாறு, மாதவரம், சேலம், திண்டிவனம், திருப்பத்தூர், கோயம்புத்தூர், வேலூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், வந்தவாசி, புதுச்சேரி மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். இந்த சிறப்பு பேருந்துகளை பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: தவெக ஆட்சியில்.. மக்கள் உயிருக்கும் விவசாயிகள் பயிருக்கும் பாதுகாப்பில்லை.. டி.ஆர்.பி. ராஜா நேரடி தாக்கு!