AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண்களே உஷார்! மெனோபாஸுக்குப் பிறகு இதய ஆரோக்கியத்தைக் காப்பது எப்படி?

Heart Disease Risk: மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து ரத்தக் குழாய்களின் நெகிழ்வுத்தன்மை பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு இதய நோய் அபாயம் கூடுகிறது. நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த அழுத்தம் உயரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனவே ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவுகளைத் தவறாமல் பரிசோதித்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தைக் காக்க முடியும்.

பெண்களே உஷார்! மெனோபாஸுக்குப் பிறகு இதய ஆரோக்கியத்தைக் காப்பது எப்படி?
மெனோபாஸ்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 21 Nov 2026 16:01 PM IST

இதய நோய்கள் ஆண்களுக்கு மட்டுமே (Heart Disease Risk)அதிகம் ஏற்படும் என்ற பொதுவான எண்ணம் தவறானது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பிறகு இதய ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியமாகிறது. வயது மூப்புடன் சேர்ந்து உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளும் இதய நலனைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் மருத்துவர் விவேகன் மனோகரன், மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் இதய பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

Also Read: சப்ளிமெண்ட்ஸ் இல்லை, பட்டினி இல்லை; 90 நாட்களில் S-க்கு மாறிய பெண்!

ஈஸ்ட்ரோஜன் குறையும்போது ஏற்படும் மாற்றங்கள்

பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இனப்பெருக்க நலனுக்கு மட்டுமின்றி, இதயத்தைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் சமநிலையைக் காப்பதிலும், ரத்தக் குழாய்கள் சீராக இயங்குவதற்கும் இந்த ஹார்மோன் துணைபுரிகிறது. மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல் அதிகரிக்கவும், அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரவும் வாய்ப்புகள் உருவாகின்றன. இத்தகைய மாற்றங்கள் ரத்தக் குழாய்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி, காலப்போக்கில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

ரத்தக் குழாய் நெகிழ்வுத்தன்மையும் நைட்ரிக் ஆக்சைடும்

ரத்தக் குழாய்கள் விரிவடைந்து இயல்பான நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள் அவசியமாகும். ஈஸ்ட்ரோஜன் ஆதரவு குறையும் சூழலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியும் குறைவதால், ரத்தக் குழாய்களின் நெகிழ்வுத்தன்மை பாதிக்கப்படலாம். இதன் விளைவாக ரத்தக் குழாய்கள் இறுக்கமடைந்து, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இன்றி இதயம், சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகளைப் பாதிக்கக்கூடும் என்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகள் செய்து கொள்வது இதயத்தைப் பாதுகாக்க உதவும்.

Also Read: சப்ளிமெண்ட்ஸ் இல்லை, பட்டினி இல்லை; 90 நாட்களில் S-க்கு மாறிய பெண்!

தவறாமல் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள்

இயற்கையான வயது மாற்றங்களையும் ஹார்மோன் குறைபாடுகளையும் முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் இதய பாதிப்புகளைக் கட்டுக்குள் வைக்கலாம். மெனோபாஸ் காலத்திலும் அதற்குப் பிறகும் பெண்கள் ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவுகளைக் கண்காணிப்பது அவசியமாகும். பொதுவாக ரத்த அழுத்தம் 140/90 மிமீஎச்ஜி அல்லது அதற்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தமாகவும், எல்டிஎல் கொலஸ்ட்ரால் 100 மி.கி/டெ.லிட்டருக்குக் கீழ் இருப்பதும், சர்க்கரை கட்டுப்பாட்டுக்கான எச்பிஏ1சி அளவு 7 சதவீதத்திற்குக் கீழ் இருப்பதும் கவனிக்கத்தக்க இலக்குகளாகக் கருதப்படுகின்றன.

Follow Us