AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உறுதியானது சூர்யாவின் 50-வது படம்? வைரலாகும் தகவல்

Actor Suriya 50th Movie Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை 47 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் தற்போது 48-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது 50-வது படம் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளது.

உறுதியானது சூர்யாவின் 50-வது படம்? வைரலாகும் தகவல்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2026 16:04 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை 47 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான 45, 46 மற்றும் 47-வது படங்கள் என மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகவும் சிறந்த ஆண்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது 48-வது படம் மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்தப் படத்தினை இயக்குநர் டிஜே ஞானவேல் எழுதி இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் இந்தப் படத்தின் மூலம் இரண்டாவதாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வருகின்ற 2027-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

உறுதியானது சூர்யாவின் 50-வது படம்? வைரலாகும் தகவல்:

சூர்யா மீண்டும் ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து கருப்பு 2 திரைப்படத்தில் பணியாற்றவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கிடையில், டி.ஜே. ஞானவேல் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனது 48 மற்றும் 49-வது திரைப்படங்களில் சூர்யா பிஸியாக உள்ளார். 2027-ஆம் ஆண்டில் சூர்யாவின் இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… Anirudh: அவளுக்கென புதிதாய் மாறினோம்.. காவியா மாறனுடன் வீடியோ பகிர்ந்த அனிருத்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெளிய துப்புவாங்க பாரு அப்போ தெரியும்.. ஜேசனிடம் வெறித்தனமாக பேசிய தன்யா – அனல் பறக்கும் ப்ரோமோ!

Follow Us