12 ஆண்டுகளைக் கடந்தது சிபி சத்யராஜின் நாய்கள் ஜாக்கிரதை படம் – வைரலாகும் பதிவு
12 Years Of Naaigal Jaakirathai Movie | தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகராக உள்ளார் நடிகர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை படம் இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவரது மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் சிபிராஜ். இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து பலப் படங்களில் தனது தந்தையுடன் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தனியாகப் பலப் படங்களில் நடித்து வந்தார் நடிகர் சிபிராஜ் (Actor Sibiraj). இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சிபிராஜ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் நாய்கள் ஜாக்கிரதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அதன்படி இந்த நாய்கள் ஜாக்கிரதை படம் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிபிராஜ் நாயகனாக நடித்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அருந்ததி, பாலாஜி வேணுகோபால், மனோபாலா, மயில்சாமி, பிரின்ஸ் நித்திக், வெங்கட் சுந்தர், ராகவ் உமாஸ்ரீனிவாசன், மகேஸ்வரன் முத்துசாமி, அபிமன்யு நல்லமுத்து, அருள் டி. சங்கர், வர்ஷா, மயில்வாகனன், சவுண்டர், அன்பு, அருணாசலம் மற்றும் செந்து மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




12 ஆண்டுகளைக் கடந்தது சிபி சத்யராஜின் நாய்கள் ஜாக்கிரதை படம்:
இந்தப் படத்தில் நடிகர் சிபிராஜ் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு நாய் இவரது வீட்டிற்கு வருகிறது. அந்த நாயால் இவருக்கு வாழ்க்கையில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Arasan Movie: அரசன் படத்திலிருந்து அனிருத் விலகிட்டாரா? தயாரிப்பாளர் விளக்கம்!
சிபிராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Even after 12 years the love for this film has never ceased to fade!Thank you all!😊❤️🙏🏻
#12YrsOfSuperhitNaaigalJaakirathai
@ShaktiRajan @ajusatin @dharankumar_c @Cinemainmygenes
#Sathyaraj
#MaheswariSathyaraj
#NathambalFilmFactory
@Under_dogfilms https://t.co/Prf2Jg9tTV— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 21, 2026
Also Read… பக்கா ஆக்ஷன்… ஜப்பானில் பிரம்மாண்டமாக நடக்கும் சூர்யா48 பட ஷூட்டிங்! – வைரலாகும் போட்டோஸ்!