AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனது 22-வது படத்தை தானே தயாரித்து நடிக்கும் நடிகர் சிபி சத்யராஜ் – வெளியானது அப்டேட்

Actor Sibiraj 22nd Movie Update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். இவரது தனது 22-வது படத்தை தானே தயாரித்து நடிக்க உள்ளார். அது தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தனது 22-வது படத்தை தானே தயாரித்து நடிக்கும் நடிகர் சிபி சத்யராஜ் – வெளியானது அப்டேட்
சிபி ராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2026 11:43 AM IST

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி நாயகனாக நடித்து தற்போது அப்பா, குணசித்திர வேடம் என பலவற்றை ஏற்று நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சத்யராஜின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் சிபி சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன காலக்கட்டத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் அடுத்தடுத்து சமீப காலமாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் டென் ஹவர்ஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ் எந்தப் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தனது 22-வது படத்தை தானே தயாரித்து நடிக்கும் நடிகர் சிபி சத்யராஜ்:

இந்த நிலையில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள அவரது 22-வது படம் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் அந்தப் படத்தை சிபி சத்யராஜே தயாரிக்கவும் உள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரத்தை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஈஸ்வர் காத்திக் எழுதி இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஓர் அற்புதமான சிறுகதையைச் சினிமாவாகப் பார்த்த அனுபவம்… பத்தா படத்தைப் வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ராஜூ முருகன்

நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓம் படத்தின் சாட்டிலைட் – ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனங்கள்? கவனத்தை ஈர்க்கும் தகவல்!

Follow Us