AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இதுக்கா சண்ட.. பிக் பாஸில் ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனுக்கும் இடையே மோதல் – வைரலாகும் புரோமோ!

TTF Vasan And Jason Fight: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நேற்று 3 வைல்ட் கார்ட் என்ட்ரி நுழைந்த நிலையில், அதில் டிடிஎப் வாசனும் ஒருவர். அந்த வகையில் இன்று (05/10/2026) பேச்சுவார்த்தையில், ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுக்கா சண்ட.. பிக் பாஸில் ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனுக்கும் இடையே மோதல் – வைரலாகும் புரோமோ!
ஜேசன் மற்றும் டிடிஎஃப் வாசன் சண்டைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Oct 2026 15:41 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தமிழில் தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி முதல் ஆரம்பமானது. கிட்டத்தட்ட 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 4 வாரங்களை கடந்துள்ள நிலையில், 5வது வாரத்க்தில் நுழைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேற்று (04/10/2026) 3 வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இன்ஸ்டாகிராம் புகழ் டிடிஎப் வாசன் (TTF Vasan), அக்ஷிதா அசோக் மற்றும் கரீஷ்மா போன்ற போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தனர். வந்த முதல் நாளிலே டிடிஎப் வாசன் மற்றும் ஜேசன் மத்தியில் பகை மூண்டது.

அதிலும் வைல்ட் கார்ட்டாக நுழைந்த போட்டியாளர்களை அனைவருமே ஜேசனை டார்கெட் செய்து பேசியிருந்தார். அந்த வகையில் இன்று (05/10/2026) வெளியான புரோமோவில் டிடிஎப் வாசன் மற்றும் ஜேசன் என இருவருக்கும் இடையே கடுமையான மோதல் நடந்துள்ளது. இது குறித்த புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வசூலில் உலக அளவில் ரூ. 150 கோடியை கடந்தது மண்டாட்டி படம்… தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

பிக் பாஸில் ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனிடையே மோதல்:

பிக் பாஸில், செருப்பு வைக்கும் இடத்திற்காக ஜேசன் மற்றும் வாசனுக்கும் இடையே சண்டை வருகிறது. அந்த வாக்குவாதத்தின்போது, ஜேசன் தனது கடுமையான வார்த்தைகளை பேசுகிறார். உடனடியாக டிடிஎப் வஸானுக்கு கோபம் வந்த நிலையில், இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளது. உடனே வாசன் அக்ஷிதாவிடம் பேசிய நிலையில், மேலும் ஜேசன் கோபப்பட்டு அவரை அடிப்பதற்காக கையை ஓங்கியிருந்தார்.

இதையும் படிங்க: தனுஷின் ஓம் படத்தின் 2-வது சிங்கிள் குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு!

இதில் இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், மற்ற ஹவுஸ்மேட்ஸ் இவர்களின் சண்டையை விளக்கியுள்ளனர். தற்போது இதுகுறித்த புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 29வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

தற்போது இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 3 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், போட்டி மேலும் தீவிரமாக உள்ளது. அந்த விதத்தில் இந்த வாரத்தின் கேப்டனாக தன்யா இருக்கிறாராம். அந்த விதத்தில் ஒரு செருப்பு வைக்கும் இடத்திற்காக ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில்,இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியானது சுவாரஸ்யமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow Us