தனுஷின் ஓம் படத்தின் 2-வது சிங்கிள் குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு!
OM Chapter 1 Movie 2nd Single Update | நடிகர் தனுஷின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஓம். இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகள் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் மொழியில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவு, பாடகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் நடிகர் தனுஷ்.
இந்தப் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் முன்னதாக அக்டோபர் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் 15-ம் தேதி வெளியாவதால் படத்தின் வெளியீட்டை ஒத்தி வைப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்து இருந்தார்.




ஓம் படத்தின் 2-வது சிங்கிள் குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு:
இந்த நிலையில் ஓம் படம் தற்போது நவம்பர் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் தொடர்பாக தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… Atlee: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உங்களிடம் கதை இருக்கிறதா? அட்லீ சொன்ன விஷயம்!
ஓம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
A new musical chapter is set to begin. ♥️✨
The second single from #OMChapter1 is coming soon.
Music by i @SaiAbhyankkar 🎶
#OM
— OM Chapter 1 (@OMTheMovie) October 5, 2026
Also Read… பிரபல நாயகனுடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் ராஜூ முருகன்? வைரலாகும் தகவல்