படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்… 7 ஆண்டுகளை நிறைவு செய்தது அசுரன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்!
7 Years Of Asuran Movie | நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றப் படம் அசுரன். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்தியா மற்றும் ஹாலிவுட் சினிமாவிலும் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருந்தாலும் அவரது ஆதர்சன இயக்குநர் வெற்றிமாறன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் தான் நாயகனாக நடித்து இருந்தார்.
அப்போது தொடங்கிய இந்த வெற்றிக் கூட்டணி தொடர்ந்து 4 முறை இணைந்து பணியாற்றி உள்ளது. மேலும் இவர்களின் கூட்டணியில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அசுரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Also Read… நானியின் தி பாரடைஸ் படத்திலிருந்து வெளியானது அஞ்சானா அஞ்சானி பாடல் வீடியோ




7 ஆண்டுகளை நிறைவு செய்தது அசுரன் படம்:
இந்தப் படத்தில் மனைவி குழந்தைகளுடன் ஒரு வாழ்க்கையை வாந்து வருபவர் தனுஷ். அவரது மூத்த மகன் சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதனால் அவர் கொலைசெய்யவும்படுகிறார். இதற்கு பழிவாங்கும் வகையில் தனுஷின் இளைய மகன் கொலை செய்தவரை கொல்ல முயற்சி செய்து அங்கு பெரிய பிரச்சனையாகிறது.
சாதிய வன்கொடுமை மட்டும் இன்றி படிப்பு ஒருவனின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றும் என்பதை இந்தப் படம் வெளிப்படையாக பேசி இருந்தது. அதிலும் படத்தில் வரும் இந்த ”காடு இருந்தா எடுத்துக்குவாங்க, பணம் இருந்தா பிடுங்கிக்குவாங்க… ஆனா, படிப்பை மட்டும் யாராலும் நம்மகிட்ட இருந்து பறிக்க முடியாது” என்று தனுஷ் கூறியது தற்போது வரை பல இடங்களில் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… Jason Sanjay: அஜித் சாரின் அந்த படத்தோட FDFS-ஆ தியேட்டரில் பார்த்தேன் – ஜேசன் சஞ்சய்!