AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jason Sanjay: அஜித் சாரின் அந்த படத்தோட FDFS-ஆ தியேட்டரில் பார்த்தேன் – ஜேசன் சஞ்சய்!

Jason Sanjay Ajith FDFS Movie: தென்னிந்திய திரையுலகில் தற்போது இளம் இயக்குநராக நுழைந்து, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருபவர்தான் ஜேசன் சஞ்சய். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், தான் தியேட்டரில் FDFS-ஆக பார்த்த அஜித்தின் படம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

Jason Sanjay: அஜித் சாரின் அந்த படத்தோட FDFS-ஆ தியேட்டரில் பார்த்தேன் – ஜேசன் சஞ்சய்!
ஜேசன் சஞ்சய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 Oct 2026 16:54 PM IST

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). முதல்வர் விஜய்யின் (CM Vijay) மகனாக இவர், சிக்மா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) மற்றும் ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் பணக்கொள்ளை தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் இந்த திரைப்படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

அந்த விதத்தில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் இன்னும் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தான் முதல் முதலில் திரையரங்குகளில் பார்த்த FDFS அஜித் குமாரின் (Ajith Kumar) திரைப்படம் எது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புத்துணர்ச்சியான சருமம்.. முக பொலிவுக்காக ஆலியா பட் சொன்ன ஸ்நாக் ரெசிபி!

அஜித் குமாரின் திரைப்படத்தின் FDFS படத்தை பார்வையிட்டது குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்:

இயக்குனர் ஜேசன் சஞ்சய் அந்த யுடியூப் நிகழ்ச்சியில் பேசுகையில், “நான் அஜித் சாரின் ஆரம்படம் படத்தை திரையரங்கு சென்று பார்த்தேன். நான் முதல் முதலில் பார்வையிட்ட அஜித் சாரின் FDFS ஆரம்பம் படம் இருந்தது. உண்மையிலே நன்றாக இருந்தது. மேலும் அப்பாவின் படம் நான் சிறுவயதிலிருந்தே நிறைய படங்களை FDFS காட்சிகளிலே பார்வையிட்டிருக்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: சிக்மா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்

சிக்மா திரைப்படம் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜேசன் சஞ்சய் இயக்குநராக இயக்கியுள்ள முதல் படம்தான் சிக்மா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான இப்படம் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது இவரின் சினிமாவின் தொடக்கமாக அமைந்துள்ள நிலையில், மேலும் புதிய படங்களில் பணியாற்றுவாரா என கூறப்படுகிறது. மேலும் இவர் ஹீரோவாகவும் விரைவில் அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us