கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
Sathyavan Savithri Movie Release Update | நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக தற்போது நடித்து உள்ள படம் சத்யவான் சாவித்திரி. இந்தப் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்து படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் அவ்வபோது சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான டோரதி படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் படம் முழுவதும் இல்லை என்றாலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதுமட்டும் இன்றி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் திரையரங்குகளில் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள தொடர் அக்கா. இந்த தொடரின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதன் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த தொடர் விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து உள்ள படம் சத்யவான் சாவித்திரி.




கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் ரிலீஸ் எப்போது?
இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து உள்ள நிலையில் நெகட்ட்வி கதாப்பாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் நடித்து உள்ளார். கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனது கணவனை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதானும் மனைவியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் வைல்கார்ட் போட்டியாளர்கள் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
சத்யவான் சாவித்திரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
NO MORE SILENCE.
SAVITHIRI’S FIGHT BEGINS!இனி மௌனம் இல்லை.
சாவித்திரியின் போராட்டமே!ఇక మౌనం లేదు.
సావిత్రి పోరాటమే!#SathyavanSavithiri worldwide in theatres on November 20 🔥#SathyavanSavithiriFromNov20 @KeerthyOfficial @DirectorMysskin @PraveenSVijaay @DrumsticksProd… pic.twitter.com/Sh5waLYwEN— Zee Studios South (@zeestudiossouth) October 2, 2026
Also Read… கேரளாவில் சூர்யாவின் சீன் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்