AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Keerthy Suresh: மனம் மற்றும் உடல் ரீதியாக பின்னடைவு.. உடல் எடையை குறைத்து இப்படிதான் – கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்!

Keerthy Sureshs Workout Secrets: மலையாள சினிமாவில் மூலமாக தென்னிந்திய மக்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஆரம்பத்திற்கும், தற்போது இருக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அவரின் உடல் எடையை எவ்வாறு குறைத்தார் என்பது குறித்து அவர் ஓபனாக பேசியுள்ளார்.

Keerthy Suresh: மனம் மற்றும் உடல் ரீதியாக பின்னடைவு.. உடல் எடையை குறைத்து இப்படிதான் – கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்!
கீர்த்தி சுரேஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 May 2026 16:34 PM IST

மலையாள சினிமாவில் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita). இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இப்படமானது டார்க் காமெடி கதைக்களத்தில் வெளியான நிலையில், ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போதுள்ள கீர்த்தி சுரேஷிற்கும், சினிமாவில் ஆரம்பத்தில் இருந்த கீர்த்தி சுரேஷிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அவ்வாறு, நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடலமைப்பை மாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் குண்டாக கியூட்டாக இருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது மிகவும் ஒல்லியாக இருக்கிறார். அந்த வகையில், அவர் உடல் எடையை குறைக்க காரணம் மற்றும் எவ்வாறு தனது உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: நெட்ஃபிலிக்ஸ் ட்ரெண்டிங்கில் பாகிஸ்தானில் முதலிடத்தை பிடித்த துரந்தர் 2 – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனது உடல் எடை குறைக்க என்ன செய்தார் என்பது குறித்து கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்:

கீர்த்தி சுரேஷ், “தனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பின்னடைவு இருந்ததாகவும், அதன் காரணமாக தற்போது ஸ்ட்ரென்த் பயிற்சியில் கவனம் செலுத்திவருகுவதாகவும் கூறியுள்ளார். அதனுடன் யோகா, அனிமல் ஃப்ளோ மற்றும் கார்டியோ என பல பயிற்சிகளை செய்து, சமநிலைப்படுத்திவருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இதுவே தான் மிகவும் நன்றாக உணர்வதாக” அவர் பகிர்ந்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் தெரிவித்த இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: மூணார் ட்ரிப் சென்ற சியான் விக்ரம்… சுற்றி குவிந்த பெண் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. தமிழில் மிஷ்கினுடன் சத்யவான் சாவித்ரி, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ரௌடி ஜனார்தனா மற்றும் மலையாளத்தில் தோட்டம் என்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துவரும் ரௌடி ஜனார்தனா படத்தில் நெருக்கமான காட்சிகளிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு, கீர்த்தி சுரேஷின் கதாபாத்திர தேர்வும் வித்தியாசமாக இருக்கிறது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us