AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: கண்ணுங்களா.. செல்லங்களா.. உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி – எமோஷனலாக பேசி சூர்யா வெளியிட்ட வீடியோ!

Suriya Thanks Fans: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூர்யா. இவரின் 45வது திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம்தான் கருப்பு. அதிரடி ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் நிறைந்த திரைப்படமாக இருந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Suriya: கண்ணுங்களா.. செல்லங்களா.. உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி – எமோஷனலாக பேசி சூர்யா வெளியிட்ட வீடியோ!
சூர்யா வெளியிட்ட வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 May 2026 10:46 AM IST

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில், நடிகர் சூர்யாவின் (Suriya) ஆக்ஷன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தில் சூர்யா கருப்பசாமியாக நடிக்க, அவருடன் முக்கியமான வேடத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போவானது கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த படமானது ஆரம்பத்தில் 2026 மே 14ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தயாரிப்பாளரின் நிதி பிரச்சனையின் காரணமாக, ஒரு நாளுக்கு பிறகு மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. சூர்யா இப்படத்தை வழக்கறிஞராகவும், நீதியை நிலைநாட்டும் கருப்பசாமியாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு இருந்துவருகிறது. அந்த வகையில், ரசிகர்கள் கொடுக்கும் அன்பான வரவேற்ப்பிற்கு நன்றி கூறி, நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: யார் கையறுத்துக்கொண்டு திருமணம் செய்தது என நிரூபிப்பேன் – ஆர்த்தியின் தாய் சுஜாதா பரபரப்பு பேச்சு!

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா வெளியிட்ட வீடியோ பதிவு:

அந்த பதிவில் சூர்யா, “கண்ணுங்களா.. செல்லங்களா.. என் சாமிகளா.. உங்களின் அன்பிற்கு ரொம்ப நன்றி. மே 14ம் தேதியில் இப்படத்தை வெளியிட முடியவில்லை, என்ன பண்ணுறது என தெரியாமல் இருந்தோம். அந்த சமயத்தில், நீங்கள் எல்லா திசைகைளிலும் இருந்து அனுப்பிய, டுவிட்ஸ், வாய்ஸ் மெசேஜ் ஆகட்டும், போன் கால் ஆகட்டும் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அன்னைக்கி நைட்டே எல்லாமே புரட்டிபோட்டுவிடலாம் என்ற மன தைரியம் வந்தது. நீங்கள்தான் எல்லாவற்றையும் மாற்றினீர்கள்.

இதையும் படிங்க: திரைத்துறை மேம்பாடு.. முதலமைச்சர் விஜய்க்கு 6 கோரிக்கை வைத்த கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!

மே 15 தேதியில் கருப்பு திரையரங்குகளில் வெளியான விதத்தை என்ற வார்த்தையில் சொல்வது என தெரியவில்லை. நீங்கள் கருப்பு படம் சம்மந்தமான அனைவருக்கும் நீங்கள் கொடுத்த மரியாதையை, வரவேற்பு அதற்காக எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது. எனது படக்குழு சார்பாக எனது மனமார்ந்த, மனம் உருகிய நன்றிகள். அன்பான தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், முக்கியமாக எனது அன்பான ரசிகர்களுக்கு மிக பெரிய நன்றி” என அந்த வீடியோவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

கருப்பு திரைப்படத்தின் வசூல் எவ்வளவு:

சூர்யாவின் கருப்பு படமானது தமிழகத்தை மட்டுமே முதல் நாளில் சுமார் ரூ 14 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us