AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!

Vishnu Vishal And Vijay Deverakonda Praise Karuppu: தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கருப்பு திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தை வாழ்த்தி, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால் பதிவை வெளியிட்டுள்ளார்.

Karuppu: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!
கருப்பு படத்தைப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 May 2026 15:03 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). அதிரடி ஆக்ஷன் மற்றும் தெய்வீக பேண்டஸி கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, நடிகர் சூர்யா மற்றும் திரிஷா (Trisha) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா கருப்பசாமியாகவே நடித்துள்ளார். அவரின் பிரசன்ஸ் திரையரங்குகளை தெரிவிக்கவிட்டிருந்தது என்று கூறலாம். இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், பலரும் பாராட்டிவருகிறார்கள். இப்படத்தின் வெளியீட்டின்போது திரையரங்குகளில் ரசிகர்கள் சாமி வந்து ஆடியது தொடர்பான வீடியோக்களும் இணையத்தை வைரலாகிவருகிறது.

அந்த அளவிற்கு உணர்வுபூர்வமான கதையில் இதை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை பாராட்டி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவருமே எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி… கட்டா குஸ்தி 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை பாராட்டி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்தப் பதிவில் விஷ்ணு விஷால், “கருப்பு திரைப்படத்திற்கு நாடு முழுவதும் கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களை கண்டு மிகவும் மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு பெரிய பிளாக் பஸ்டர் தரவேண்டியிருந்தது. இதுதான் அந்த படம். சூர்யா அண்ணா, இத்தனை வருடங்களாக உங்கள் ரசிகனாக இருக்கும் எனக்கு, இதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அனைத்து தடைகளையும் மீறி வெற்றி பெற்ற அவர்களின் முயற்சிகளுக்காக வாழ்த்துக்கள்” என அதில் அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

சூர்யாவின் கருப்பு படத்தை வாழ்த்தி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அதில் விஜய் தேவரகொண்டா, “சூர்யா அண்ணாவின் கருப்பு படத்திற்கு மக்களிடையே கிடைத்துவரும், அபரிமிதமான அன்பை கண்டு மிகவும் மகிழ்ச்சி. இதை கேட்பதற்கே ஹேப்பியாக இருக்கிறது. இந்தச் செய்தி மிகவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திரையில் தனது முழு உழைப்பையும் கொடுத்து, அவர் நமக்குக் காட்டிவரும் அபாரமான திறமைக்காக… இறுதியாக, திரையரங்குகள் ஆரவாரத்துடனும் சத்தத்துடனும் இருக்கும்போது, ​​அது நம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. மேலும் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அன்புக்குரிய திரிஷாவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என அதில வர கூறியுள்ளார்.

Follow Us