இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி… கட்டா குஸ்தி 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Gatta Kusthi 2 Movie Second Look Poster Out Now | நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கட்டா குஸ்தி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிரார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரித்து வருகின்றது. தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவனா படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்ரது. அந்த வரிசையில் தற்போது கட்டா குஸ்தி 2 படமும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக வெளியான முதல் பாகம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் படிப்பு அறிவு எதுவும் இல்லை என்றாலும் பொண்டாட்டி தனது காலடியில் கிடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு குஸ்தி போடும் மனைவி ஐஸ்வர்யா லெக்ஷ்மி கிடைக்கிறார்.
திருமணத்திற்காக ஐஸ்வர்யா லெக்ஷ்மி மிகவும் அமைதியான பெண் என்று கூறி விஷ்ணு விஷாலை ஏமாற்றி திருமணம் செய்து வைக்கிறார்கள். அவரும் அந்த் பொய் உண்மை என்பது போலவே நடித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் தனது கணவரின் உயிரிக்கு ஆபந்து வரும் போது அவர் தனது குஸ்தியை வெளியே காட்டுகிறார். அது கணவர் மற்றும் ஊர் மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கை எப்படி சென்றது என்பதே முதல் பாகம்.




கட்டா குஸ்தி 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
கட்டா குஸ்தி படத்தின் முதல் பாகம் வெளியாகும் போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான லீடும் கொடுக்கப்பட்டது. அதன்படி தற்போது கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியான நிலையில் இரண்டாம் பார்வையை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் கட்டா குஸ்தி 2 படம் வருகின்ற ஜூலை மாதம் 3-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
சண்டை போடாத ஜோடியே இல்லைன்னு சொல்லுவாங்க.
இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி 🤼
Presenting the SECOND LOOK of #GattaKusthi2 – ft. @TheVishnuVishal and #AishwaryaLekshmi.
In theatres on July 3rd, 2026!
Produced by @VelsFilmIntl & @VVStudioz .
A film by @ChellaAyyavu.
An… pic.twitter.com/zQdfSr2RW1— Vels Film International (@VelsFilmIntl) May 16, 2026