AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எங்க கண்முன்னே சர்கார் பட போஸ்டர்களை கிழித்தார்கள்.. நானும் அவரும் கண்ணீருடன் அதை பார்த்தோம் – மனமுடைந்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்!

AR Murugadoss on Sarkars Release Trauma: ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் முதல் இந்தி போன்ற மொழிகளில் படங்களை இயக்கி வெற்றிகொடுத்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடிகர் ஜெய்யின் சட்டென்று மாறுது வானிலை என்ற பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் சர்கார் பட ரிலீஸின்போது நடந்த, வேதனையான தருணங்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

எங்க கண்முன்னே சர்கார் பட போஸ்டர்களை கிழித்தார்கள்.. நானும் அவரும் கண்ணீருடன் அதை பார்த்தோம் – மனமுடைந்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்!
சர்கார் படம் பற்றி ஏஆர் முருகதாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 May 2026 17:07 PM IST

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss). இவர் தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் நடிகர் சூர்யா (Suriya) வரை பல்வேறு பிரபலங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் இவர் தற்போது சினிமாவில் படங்களை இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டில் மதராஸி (Madharaasi) என்ற படமானது வெளியாகியிருந்தது. இதில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. திரையரங்குகளில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் தற்போது குழந்தைகளுக்கான படத்தை இவர் இயக்கிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில், நடைபெற்ற ஜெய்யின் (Actor Jai) சட்டென்று மாறுது வானிலை படத்தின் (Sattendru Maarudhu Vaanilai) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவர், முதல்வரும், முன்னாள் நடிகருமான விஜய்யின் சர்கார் படத்தின் (Sarkar) ரிலீஸின்போது நடந்த வேதனையளித்த சம்பவம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: வெரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்

சர்கார் பாட வெளியீட்டின்போது நடந்த வேதனையான சம்பவம் குறித்து பகிர்ந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்:

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “சர்கார் படத்தின் ரிலீஸின்போது படத்தின் போஸ்டர்களை கிழிகிறது, அதுபோல பல சம்பவங்கள் நடந்தது. மேலும் போலீஸ் எல்லாம் எங்களை தேடுவதுபோன்ற சம்பவமும் நடந்தது. என்னுடன் மோசமான காலங்களிலும் இருந்தவர் பாபு விஜய். சர்கார் படம் ரிலீசான சமயத்தில் அதன் போஸ்டர்களை எல்லாம் கிழித்தார்கள். நானும், பாபு விஜய்யும் காசி தியேட்டரை கடந்து செல்லும்போது, அதை கண்ணீர் வழிய பார்த்தோம்” என அதில் அவர் வெளிப்படியாக் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: சிட்னி ஸ்வீனி பயலுகா… ஹாரர் நகைச்சுவையுடன் வெளியான சந்தானத்தின் லவ் பைட் பட புரோமோ வீடியோ!

ஜெய்யின் சட்டென்று மாறுது வானிலை பட ட்ரெய்லர் குறித்த பதிவு:

நடிகர் ஜெய்யின் சட்டென்றுமாறுது வானிலை படத்தை இயக்கியுள்ளவர் இயக்குநர் பாபு விஜய். இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநராக படங்களில் பணியாற்றியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டென்று மாறுது வானிலை படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us