AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்

Verappa Extended Lyric Video Out Now | கருப்பு படத்தில் உருவான வீரப்பா பாடலின் எக்ஸ்டண்டட் வெர்ஷனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ள நிலையில் தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வீரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 May 2026 12:40 PM IST

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் கருப்பு. இந்தப் படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைப்பெற்று வந்த நிலையில் ஒரு வழியாக தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி படம் நாளை மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் மிகவும் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து ஹைதராபாத், கேரளா மற்றும் தமிழ் நாடு என்று படு பிசியாக படக்குழு சுற்றி வருகின்றது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் படக்குழு தினமும் ஒரு போஸ்டரை வெளியிட்டு வந்தது. இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளார். இவரது இசையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் இரண்டாவது படம் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவரது இசையில் வெளியான டியூட் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வீரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்:

இந்த நிலையில் கருப்பு படத்தில் இருந்து அடுத்தடுத்தப் பாடல்களும் வெளியாகி முன்னதாக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. அதில் குறிப்பாக வீரப்பா என்ற பாடல் தமிழ் மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த வீரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை தற்போது கருப்பு படக்குழு வெளியிட்டுள்ளது. அருண் ஸ்ரீனிவாசன் எழுதிய இந்தப் பாடலை பாடகர்கள் சாய் அபயங்கர் மற்றும் அறிவு இருவரும் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு பட நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்.. அடுத்த நொடியே அவர் செய்த விஷயம் – வைரலாகும் வீடியோ!

Follow Us