AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்ற மணி ஹெய்ஸ்ட் சீரிஸின் அடுத்த பாகம்… அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!

Money Heist Web Series Next Season Update | ஸ்பானிஷ் மொழியில் உருவான கொள்ளை சம்மந்தமான தொடர் தான் மணி ஹெய்ஸ்ட். தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பான இது பிறகு இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் உலக அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்ற மணி ஹெய்ஸ்ட் சீரிஸின் அடுத்த பாகம்… அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!
மணி ஹெய்ஸ்ட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2026 20:05 PM IST

இந்திய சினிமாவில் ஓடிடி கலாச்சாரம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து இருந்தாலும் அது அதிக அளவில் பயன்பட்டது என்னவோ கொரோனா காலக்கட்டத்தில் தான். கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது அரசால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருந்த மக்களுக்கு பொழுதுபோக்கு என்பது டிவி மற்றும் கேட்ஜெட்ஸ்கள் மட்டுமே. இந்த சூழலில் தான் இந்திய மக்களிடையே ஓடிடியின் பயன்பாடு அதிகரித்தது என்று கூறலாம். ஆம் இந்த காலக்கட்டத்தில் மக்கள் அதிக அளவில் ஓடிடியை பயன்படுத்தி படங்கள் மற்றும் இணையதள தொடர்களை பார்த்தனர். தொடர்ந்து தங்களது தாய் மொழிப் படங்கள் மட்டும் இன்றி மற்ற மொழி படங்களையும் மக்கள் அதிக அளவில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலக்கட்டத்தில் தான் இந்திய சினிமா ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானது மணி ஹெய்ஸ்ட் என்ற இணையதள தொடர். ஸ்பானிஸ் மொழியில் உருவான இந்த தொடர் அந்த நாட்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அந்த மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான பிறகு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே அடுத்தடுத்த சீசன்கள் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

மணி ஹெய்ஸ்ட் சீரிஸின் அடுத்த சீரிஸ் அப்டேட் வெளியானது:

கொள்ளை, க்ரைம் ட்ராமா மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான இந்த மணி ஹெய்ஸ்ட் இணையதள தொடர் இதுவரை 3 பாகங்கள் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் ஸ்பானிஸ் நடிகர்கள் பலர் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் பாகங்கள் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்று பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்தப் பாகத்திற்கான அப்டேட்டை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Peddi: ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் அப்டேட்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அனுபமா பரமேஸ்வரனுக்கு மட்டும் ஏன் இப்படியான கதையா அமையுது? ஓடிடியில் வெளியாகி உள்ள லாக்டவுன் படத்தின் விமர்சனம் இதோ

Follow Us