AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தள்ளிப்போகிறதா விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்

Suriyas Vishwanatha And Sons Movie Release Update Is Viral On Social Media: தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் வைரலாகி வருகின்றது.

தள்ளிப்போகிறதா விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 May 2026 16:19 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னதாக வாத்தி படத்த்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

இந்தப் படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா இருவரும் கூட்டணி அமைத்ததே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தள்ளிப்போகிறதா விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ரிலீஸ்?

இந்த படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகை மமிதா பைஜூ ஜோடியாக நடித்துள்ளார். வித்யாசமான கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் முன்னதாக ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் படம் தற்போது சுதந்திர தின வாரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகை வருகின்றது.

Also Read… சன் டிவியில் வரும் புதிய சீரியல்.. வைரலாகும் ஷூட்டிங் போட்டோஸ்!

இணையத்தில் வைரலகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Karuppu: சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்.. ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Follow Us