தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… எச்சரிக்கை கொடுத்த சிவகார்த்திகேயன்!
SK Productions Issues Urgent Warning: நடிகர் சிவகார்த்திகேயன் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், திரைப்படங்களையும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துவருகிறார். அந்த வகையில் இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை மோசடி நடைபெற்றுவரும் நிலையில், அதை எச்சரித்து பதிவை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில், தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பராசக்தி (Parasakthi). இப்படமானது டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாத்த வரவேற்பை பெறவில்லை. இருஙகளும், தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடிக்கிறார். இவர் தற்போது நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) தயாரிப்பில் சேயோன் (Seyon) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவருகிறார்.
அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் நிலையில், இந்நிறுவனத்தின் பெயரில், நடிகர்கள், இயக்குநர்கள் தேர்வு என போலியாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அதை எச்சரித்துப் பதிவை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ரத்னகுமார் இயக்கத்தில் மேயாத மான், குலு குலு பாணியில் வரவேற்பைப் பெறுமா 29 படம்? மக்களின் கருத்து இதுதான்
சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை பதிவு:
Caution ⚠️
Beware of fake casting WhatsApp messages, emails, calls or social media posts.
Please follow only our official handles for authentic updates. pic.twitter.com/WB0lGAkXYK
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 8, 2026
சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில், நடிகர்கள், இயக்குநர்கள் தேர்வு என ஏஜெண்டுகள் மற்றும் மூன்றாம் தரப்பினர் மூலமாக நடந்தப்பட்டுவருவது முற்றிலும் போலியானது. இதுவரை எங்கள் நிறுவனம் அவ்வாறு யாரையும் நியமிக்கவில்லை. சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின், நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு எப்போதுமே அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களில் மட்டுமே வெளியிடப்படும். இதற்கு மாறாக வாட்ஸ்அப், இமெயில், சமூக ஊடக வலைதள பதிவுகளை நம்பவேண்டாம் என்றும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரில் தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் மூழ்கடிக்கப்படும் சமூகம்… காதலை முடிவு செய்யும் மீட்டர்… ஓடிடியில் வெளியாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விமர்சனம் இதோ
சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் இறுதியாக வெளியான படம் தாய் கிழவி. இது 2026ம் பிப்ரவரி இறுதியில் வெளியான இந்த படமானது உலகமெங்கும் சுமார் ரூ 85 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதை இயக்குநர் சிவகுமார் இயக்க, ராதிகா சரத்குமார் நாயகியாக நடித்திருந்தார். கிராமத்து காமெடி கதைக்களத்தில் வெளியான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குநரை கொண்டு புதிய படத்தை தயாரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தத்க்கது.