AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

KHxRK திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – முழு விவரங்கள் இதோ!

KHxRK Movie Budget: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபெரும் தூண்களாக இருந்துவருபவரால் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். இவர்கள் இருவரின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள படம்தான் KHxRK. இப்படத்திற்காக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாங்கும் வாங்கும் சம்பளம் குறித்து விவரமாக பார்க்கலாம்.

KHxRK திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – முழு விவரங்கள் இதோ!
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 May 2026 20:05 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்டமான நடிகர்களாக இருந்துவருபவர்கள் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர்கள் இருவருமே சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் இணைந்து படங்களில் நடித்துள்ளனர். அதன் பிறகு, இவர்களுக்குள் ஏற்பட்ட சில ஒப்பந்தங்களின் காரணமாக மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் படத்திலே கமல்ஹாசனுடன்தான் இணைந்து நடித்திருந்தார். அந்த படம்தான் கடந்த 1975ம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள். இதையடுத்து சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வரிசையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு, இவர்கள் இருவருமே இணைந்து நடிக்கவுள்ள படம்தான் KHxRK .

இந்த புதிய திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்காக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இறுதியாக என்னிடம் கேட்டது… ரஜினிகாந்த் சொன்ன விசயம்

KHxRK திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாங்கும் சம்பளம்:

இந்த இரு பெரும் தூண்களும் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் இப்படமானது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. இப்படம் கோலிவுட் சினிமாவிலே பிரம்மாண்டமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசனுக்கு ரூ 200 முதல் 220 கோடிகள் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: கோவையில் குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!

அதே போல ரஜினிகாந்திற்கு ரூ 180 முதல் 200 கோடிகள் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மேலும் லாபத்துடனும் பங்குகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு ரூ 70 முதல் 100 கோடிகள்வரை சம்பளம் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்ல படுகிறது.

KHxRK திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பளம் விவரம் குறித்து வைரலாகும் பதிவு:

இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், இவர் சமீபத்தில்தான் ஜெயிலர் 2 படத்தை இயக்கி முடித்திருந்தார். இதையடுத்து தற்போது KHxRK இப்படத்திற்காக கதை எழுதும் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இப்படமானது பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள நிலையில், அனிருத்தான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் , ரஜினிகாந்த் தலைவர் 173 படத்தை முடித்த பிறகு தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us