சூர்யா 48 படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
Actor Suriya 48th Movie Release Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை 47 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தற்போது 48-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தம் 47 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் இறுதியாக தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு மூன்றாவதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு சீன் படம் திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் தமிழ் மொழியில் உள்ள பல யூடியூப் பிரபலங்கள் இந்தப் படத்தில் முழுவதுமாக நிறைந்து இருந்தனர் என்ற்கு கூறினால் அது மிகையாகாது.




சூர்யா 48 படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா?
அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 48 என்று பெயர் வைக்கபப்ட்டுள்ளது. இயக்குநர் டிஜே ஞானவேல் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். மேலும் நடிகை கயாடு லோஹர் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, சூர்யா 48 திரைப்படத்தை 2027-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு, ஜப்பானில் படப்பிடிப்பின் ஒரு கூடுதல் கட்டத்தை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஓடிடியில் வெளியான பத்தா படத்தை கொண்டாடும் ரசிகர்கள்… என்ன காரணம் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya48 is planning for a May 1st, 2027 theatrical release. After Diwali, the team is going for 1 more shooting schedule in Japan 🇯🇵.
A #TJGnanavel (#JaiBhim Director) film.
Also, #Suriya & #Karthi are going as a joint family on a vacation for Christmas 🎄
Source – Valai Pechu
— Movies Singapore (@MoviesSingapore) November 7, 2026