Suriya: கலக்கல் பிளாக்பஸ்டர்.. சூர்யாவின் சீன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? – இணையத்தில் பரவும் தகவல்!
Scene Movie Day 1 Collection: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் தமிழில் வெளியான திரைப்படம்தான் சீன். இந்த படமானது வெளியாகி ஒரு நாளை கடந்த நிலையில், உலகளாவிய வசூல் எவ்வளவு என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
ரசிகர்களால் தி ஒன் (The One) என அழைக்கப்பட்டுவரும் முன்னணி ஸ்டார் ஹீரோதான் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டிலே இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் சீன் (Scene Movie). இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, சூர்யா மற்றும் ஜோதிகா (Jyotika) தங்களின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். இந்த படமானது அசத்தல் காமெடி மற்றும் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடித்திருந்தார்.
இப்படமானது நேற்று (06/11/2026) உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இன்றுடன் இப்படம் வெளியாகி ஒரு நாளை கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கமல்ஹாசனின் பர்த்டே.. தொடங்கியது சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங் – வெளியான அறிவிப்பு!
முதல் நாள் முடிவில் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு:
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி மற்றும் துப்பறிவு செய்யும் நபராக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் நடித்துள்ள நிலையில், மேலும் அவர்களுடன் லால், நஸ்லேன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அட எதிர்பார்க்காத எவிக்ஷன்.. பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
இந்த படம் காமெடி, திரில்லர் மற்றும் சுவாரஸ்யம் என சிறப்பாக அமைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துவருகிறது. அந்த விதத்தில் இப்படமானது முதல் நாள் முடிவில் உலகமெங்கும் சுமார் ரூ 44 கோடிகளுக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
சூர்யாவின் சீன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Blockbuster Reports All Over The World! #SCENE 💥
In Cinemas Now! 🧨
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @RakenduMouliv @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @GokulamMovies @SakthiFilmFctry @NVRCinema @MMovies4u @vkfilmsrelease @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @ursvamsishekar @pro_sabari @prosathish
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 6, 2026
2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இந்த சீன் படமானது வெளியாகியுள்ள நிலையில், வார விடுமுறையில் இன்னும் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று, அதிக வசூலை ஈட்டும் என கூறப்படுகிறது. இப்படத்துடன் ராமாயணா பார்ட் 1 மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 போன்ற திரைப்படங்கள் வெளியாகிவரும் நிலையில், இப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்துவருகிறதுக்கே ன்பது குறிப்பிடத்தக்கது.