AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தென்காசி அருகே பெண் எரித்து கொலை.. கணவன், தாய், கொழுந்தன் கைது.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Tenkasi Woman Burning Murder : தென்காசி அருகே வாழை தோட்டத்தில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத் தில் கணவன், தாய், கொழுந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கொலைக்கான அதிர் ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

தென்காசி அருகே பெண் எரித்து கொலை.. கணவன், தாய், கொழுந்தன் கைது.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 07 Nov 2026 13:49 PM IST

தென்காசி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை தனிப்படை போலீசார் இன்று சனிக்கிழமை கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன் ( 45 வயது), தனது மனைவி குட்டிமாரியுடன் ( 33 வயது) தென்காசி மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் தங்கியிருந்து பிளாட்பாரங்களில் துணி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுடன் முருகனின் தம்பி ரவி ( 40 வயது) மற்றும் அவரது தாய் சிவகாமி ஆகியோரும் உடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சுரண்டை- சுந்தரபாண்டியபுரம் சாலையில் உள்ள வாழை தோட்டத்தில் ஒரு பெண் சடலம் நெரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

பெண்ணுக்கும் கொழுந்தனுக்கும் கள்ளத் தொடர்பு

இந்த தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குட்டி மாரி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன்படி, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், குட்டி மாரிக்கும், அவரது கொழுந்தன் ரவிக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த அவரது கணவர் முருகன் கண்டித்துள்ளார். ஆனால், அதனை ஏற்காமல் குட்டிமாரி கள்ள உறவை தொடர்ந்து வந்துள்ளார். இதனிடையே, கள்ள உறவை கைவிடுமாறு குட்டிமாரியிடம், அவரது கொழுந்தன் ரவி கூறியுள்ளார்.

மேலும் படிக்க: வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் அத்துமீறல்.. தூத்துக்குடி தனிப்பிரிவு ஏட்டு மீது 3 பிரிவுகளில் வழக்கு.. நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு!

துண்டால் கழுத்தை நெரித்து கொன்ற கொழுந்தன்

ஆனால், அதற்கு குட்டிமாரி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த ரவி துண்டால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். அத்துடன், இந்த கொலையை மறைப்பதற்காக ரவி, அவரது அண்ணன் முருகன் மற்றும் தாய் சிவகாமி ஆகியோரின் உதவியுடன் குட்டி மாரி சடலத்தை சுரண்டை அருகே உள்ள வாழை தோட்டத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரது சடலத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு, பின்னர் எதுவும் தெரியாதது போல கடையநல்லூர் புறப்பட்டு சென்று விட்டனர். ஆனால், தென்காசி தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் இந்த கொலை சம்பவம் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.

கணவன், கொழுந்தன், தாய் கைது – சிறையில் அடைப்பு

இதைத் தொடர்ந்து, கொலை செய்ததற்காக ரவியையும், அந்த கொலை மற்றும் தடயங்களை அழித்ததற்காக முருகன் மற்றும் சிவகாமி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: நீலகிரியில் அதிர்ச்சி.. வனத்துறை ஜீப்பை முட்டி கவிழ்த்த காட்டு யானை.. உயிரை கையில் பிடித்தபடி நடுங்கிய 4 பேர்!

Follow Us