AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரத்தமும் இல்ல சத்தமும் இல்ல.. இந்த வாரம் போட்டியாளர்களை வெளுத்துவாங்க காத்திருக்கும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Bigg Boss: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியில் 9வது வாரமானது இறுதியில் உள்ள நிலையில், இன்று போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்திப்பார். அது குறித்து வெளியான முதல் ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

ரத்தமும் இல்ல சத்தமும் இல்ல.. இந்த வாரம் போட்டியாளர்களை வெளுத்துவாங்க காத்திருக்கும் விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி பிக் பாஸ் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2026 14:44 PM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்த்தியானது விஜய் டிவி (Vijay Tv) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சி 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், இன்றுடன் (07/11/2026) கிட்டத்தட்ட 62 நாட்களை கடந்துள்ளது. இந்த போட்டியில் இந்த வாரத்தில் மொத்தம் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வாரம் பிபி திருந்துங்கடா என்ற டாஸ்க் நடந்த நிலையில், ஓரளவு நன்றாக இந்த நிகழ்ச்சி இருந்தது. இன்று (07/11/2026) வார இறுதி என்ற நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார். அது குறித்து வெளியான முதல் ப்ரோமோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: அட எதிர்பார்க்காத எவிக்ஷன்.. பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?

இந்த வாரம் போட்டியாளர்களை வெளுத்துவங்குவாரா விஜய் சேதுபதி:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, இந்த பிக் பாஸ் வீட்டில் ரத்தமும் இல்ல சாந்தமும் இல்ல டாஸ்கில் 4 கொலை நடந்திருக்கு. இங்க என்ன நடக்குது யாருக்கு ஒட்டு அதிகமாக இருக்குதுனு தெரியாம, அவங்களே ஓட்டுப்போட்டு யாரு 1, யாரு 2 என தேர்ந்தெடுத்துருக்காங்க. மேலும் இதிலும் முக்கியமாக ஒன்னு இருக்கு, இவர்களே ஓட்டுப்போட்டு இந்த வாரத்திற்கான தலைவரையும் தேர்ந்தெடுத்திருக்காங்க.

இதையும் படிங்க: திரையரங்கில் 6 காட்சிகள் அனுமதி.. தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.. அன்புமணி கடும் கண்டனம்!

இந்த லீடர் வீட்டுக்குள்ள இருந்தகங்களா? இல்லையா என தெரியவில்லை என போட்டியாளர்களை கேள்வியில் இந்த வராம கொண்டு செல்வதுபோல முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். தற்போது இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 62வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த வாரத்தில் தீபாவளி என்ற நிலையில், எந்த எவிக்ஷனும் இருக்காதது என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரத்தில் அக்ஷிதா அசோக் வெளியேற்றப்பட்டுள்ளாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us