தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ.45,000 வரை ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு
TN Election Duty Incentives : தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசின் கீழ் பணியாற்றிய பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.45,000 வரை கிடைக்கும்.
சென்னை, நவம்பர் 7 : தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.45, 000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு (TN Government) தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசின் கீழ் பணியாற்றிய பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுத்து இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. சட்டமன்ற தேரத்தில்ல வாக்குசாவடிகளில் பாதுகாப்பு பணிகள், தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்தல், தேர்தல் செலவினங்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : பெரியார் நூலகத்தில் இல்லாத பதிப்பகம் பெயரில் புத்தகங்களா?.. முதல்வர் விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் கோரிக்கை!




அரசு ஊழியர்களுக்கு ரூ.45,000 வரை ஊக்கத்தொகை
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய அரச அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுக்கு அவர்களின் பொறுப்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.45,000 வரை ஊக்கத்தொகை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் ஆகியோருக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சமாக ரூ.45,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு மாத அடிப்படை ஊதியம் ரூ.45,000க்கும் குறைவாக இருந்தால் அந்தத் தொகையே ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அடிப்படை ஊதியம் ரூ.45,000-க்கும் அதிகமாக இருந்தாலும் அதிகபட்சமாக ரூ.45,000 மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட தேர்தல் அலுவலகப் பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாசியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
இதையும் படிக்க : சொத்துக் குவிப்பு வழக்கு.. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத சி.விஜயபாஸ்கர்.. நடந்தது என்ன?
மேலும், தேர்தல் காலத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினர், தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் கணக்குக் குழுவினர், தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்கும் குழுவினர் ஆகியோரும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளனர். செலவின பார்வையாளர்கள், பிற கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றியவர்கள் மற்றும் மண்டல அளவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்த உதவியாளர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.