AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்! – திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு

Minister Rajmohan Alleges DMK AI Scam : பெரியார் அறிவுலகத்துக்கு போலி புத்தகங்களை கொள்முதல் செய்த சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன்"இந்தியாவில் முதல் ஏஐ ஊழலை செய்துள்ளது திமுக. கடந்த 2026 பிப்ரவரி மாதம் புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்! – திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு
அமைச்சர் ராஜ்மோகன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Nov 2026 15:48 PM IST

சென்னை, நவம்பர் 7 : கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு போலியாக புத்தகங்கள் வாங்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான தவெகவும் எதிர்கட்சியான திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் (Minister Rajmohan), “இந்தியாவில் முதல் ஏஐ ஊழலை செய்துள்ளது திமுக. பிப்ரவரி மாதம் புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தகம் நூலகத்தில் அடுக்கப்பட்ட தேதி தான் சீல் வைக்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்!

மேலும் பேசிய அவர், திருச்சி காமராஜர் அறிவுலகத்திற்கும் ஏ.ஐ. புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் ஏஐ ஊழலை செய்துள்ளது திமுக. பிப்ரவரி 14, 2026 அன்று புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தகம் நூலகத்தில் அடுக்கப்பட்ட தேதி தான் சீல் வைக்கப்பட்டது. யார் கொடுத்த அழுத்தத்தில் அதிகாரிகள் இந்த புத்தகத்தை எல்லாம் வாங்கினார்கள். சென்னை கன்னிமாரா நூலகத்தில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது எ என்றார்.

இதையும் படிக்க : தவெக எம்எல்ஏவிடம் ரூ. 30 கோடி குதிரை பேரம்.. 2- ஆவது நாளாக பி.எம்.மன்னனிடம் விசாரணை!

”திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி தான் ஏஐ புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. உயர்நிலைக் குழுவில் உள்ள அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு முறைகேடு நடந்துள்ளது. கடந்த 2, 3 ஆண்டுகளாகவே போலி பெயர்களில் நூலகங்களுக்கு புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. மேலும் பேசிய அவர், எங்களுடைய ஆட்சியில் ஒரு புத்தகம் கூட நாங்கள் வாங்கவில்லை. ஒரு ரூபாய் கூட எங்களது கணக்கில் இருந்து செல்லவில்லை. பெரியார் நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும். புத்தகங்களை அடுக்கும்போது ஜூன் மாதம் சீல் மட்டுமே வைக்கப்பட்டது.

எல்லா நூலகத்திலும் வாத்தி ரெய்டு நடக்கும்!

தொடர்ந்து பேசிய அவர், இது சாதாரண ஊழல் இல்லை. குப்பைகளை விட மோசமான புத்தகங்களை வாங்க தி.மு.க அரசு கொள்முதல் ஆணை வழங்கியது. திமுக அரசியல் தலைமை தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் கண்டறியப்படும். எல்லா நூலகத்திலும் வாத்தி ரெய்டு நடக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : பெரியார் நூலகத்தில் இல்லாத பதிப்பகம் பெயரில் புத்தகங்களா?.. முதல்வர் விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் கோரிக்கை!

மேலும், நூலகங்களில் ஏ.ஐ. ஊழல் செய்த திமுகவினர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், மக்களும், மாணவர்களும் விட மாட்டார்கள். ஊழல் செய்த திமுகவினர் மீது காவல்துறை மூலமும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நூல் கொள்முதல் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மிகத் தீவிரமாக விசாரணை நடத்த உள்ளது. போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Follow Us