மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Tamil Nadu CM Vijay Writes to PM Modi : காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 7 : காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடகம் உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல. கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம் தமிழ்நாட்டுக்கான உரிய நீர்வரத்தை தடுக்கும். தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் மேகதாது திட்டம் உள்ளது என்றும் முதல்வர் விஜய் (CM Joseph Vijay) தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
மேலும் அந்த கடிதத்தில், தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைத்திடவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை கட்டும் இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் அண்மையில் பார்வையிட்டது சரியல்ல. மேலும் கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ மற்றும் நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘சண்டியர்’.. கமல்ஹாசனின் முடிவுக்கு கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!!




முதல்வர் விஜய் எழுதியுள்ள அந்த கடிதத்தில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது நீர்த்தேக்கத்தைக் கட்ட கர்நாடக அரசு உத்தேசித்துள்ள திட்டம், தமிழ்நாட்டுக்கு உரிய நீர்வரத்தைத் தடுப்பது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்தபடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொட்ந்து நீர்ப் பற்றாக்குறை ஆண்டுகளில் விகிதாச்சார (pro-rata) அடிப்படையில் கூட தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டிய நீரினை கர்நாடகா வழங்க மறுப்பதால், இந்தப் பற்றாக்குறை நீர் ஆண்டில் (2026-27) ஏற்கனவே தவித்து வரும் காவிரி டெல்டா விவசாயிகளின் கவலையை, மத்திய அரசு அதிகாரிகள் அணைகட்ட உத்தேசித்துள்ள இடத்தைப் பார்வையிட்டதாக வந்த செய்தி மேலும் அதிகரித்துள்ளதாகவும் அக்கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்கி உள்ளதாக தெளிவாக நிரூபிக்கப்படாமல் மேகதாது திட்டத்திற்கு எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக ஒப்புதலும் வழங்கப்படக் கூடாது என்று தாம் கோரியிருந்ததையும் தனது கடிதத்தில் முதல்வர் விஜய் தனது கடிததத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : தீபாவளி சர்ப்ரைஸ்.. அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்கடன் தள்ளுபடி.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்னையில் தீர்வு எட்டப்படும் வரை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மேகதாது திட்டத்திற்கு எந்தவொரு அனுமதியையும் வழங்கத் தடை விதிக்கக் கோரி, கடந்த மே 27, 2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது என்றும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஜூன் 19, 2026 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத்திய நீர்சக்தி அமைச்சகம் கர்நாடக அரசுக்கோ அல்லது அதன் நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளுக்கோ எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தப்பட்டதையும் முதல்வர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.