ராஜா ராணி படத்தில் நாங்கள் தான் நடித்து இருக்க வேண்டியது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா
Actress Regena Cassandra Interview Viral On Social Media | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ராஜா ராணி படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா (Actress Regena Cassandra). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது போல தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அது மட்டும் இன்றி அவ்வபோது இந்தி மொழிகளிலும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் தமிழ் மொழியில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் மூக்குத்தி அம்மன் 2. இயக்குநர் சுந்தர் சி இந்தப் படத்தினை எழுதி இயக்கி இருந்தார். நடிகை நயன்தாரா நாயகியாக இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் தான் உட்பட மற்ற நடிகர்கள் தான் நடிக்க வேண்டியது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.




ராஜா ராணி படத்தில் நாங்கள் தான் நடித்து இருக்க வேண்டியது:
அதன்படி நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியதாவது, இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நானும், சிவகார்த்திகேயனும், பிரியா ஆனந்தும் நடிப்பதாக இருந்தது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகை ரெஜினா, முதலில் இயக்குனர் அட்லி சிவகார்த்திகேயனிடமும், அதன் பிறகு பிரியா ஆனந்த் மற்றும் என்னிடமும் கதையைக் கூறினார். இந்தத் திரைப்படத்தில் ஜெய்யும் நடிப்பதாக இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. பின்னர், கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தோம். அதுவரை நான் நடித்திராத, மிகவும் எளிமையான மற்றும் அழகான கதாபாத்திரம் அது என்றும் அவர் பேசி இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#RegenaCassandrra Recent
– I, #Sivakarthikeyan, and Priya Anand were supposed to be in Raja Rani. First, director #Atlee narrated the story to Sivakarthikeyan, then to Priya Anand and me. #Jai was also part of the cast, but it not happen.
– Then, in Kedi Billa Killadi Ranga, Sivakarthikeyan and I met, I had never done a role like that till date it was a very simple and cute character.
#Seyon— Movie Tamil (@_MovieTamil) November 7, 2026
Also Read… இன்று தொடங்குகிறது தமிழ் படம் 3 ஷூட்டிங் – வைரலாகும் பதிவு!