ஓம் பட இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசிய மம்முட்டி – வைரலாகும் வீடியோ
Actor Mammoottys Fun Speech At OM Audio Launch | தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள பெரிய பட்ஜெட் படம் என்பது ஓம். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மம்முட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதி இருந்து தொடர்ந்து உச்ச நடிகர்களின் படங்கள் பல வரிசையாக வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த 2026-ம் ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தொடர்ந்து படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள பெரிய பட்ஜெட் படம் என்றால் அது நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஓம் சாப்டர் ஒன்று ஆகும். இந்தப் படம் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் இரண்டாவதாக வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓம் சாப்டர் ஒன்று படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதில் முக்கியமானவர் நடிகர் மம்முட்டி. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இதில் நடிகர் மம்முட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஓம் பட இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசிய மம்முட்டி:
அதில் அவர் பேசியதாவது, 7 வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படம் நடிக்கிறேன். பேரன்பு கப்றம் தமிழ் பாடம் பண்ணனும் னு நெனச்சேன், நேரையா ஒரு கிட்ட கேட்டேன். ஆனா யாரும் கண்டுகளா. மறக்க முடியாத படம் இது. நா ரஜினி சார் கூட நடிச்சேன், தனுஷ் சார் கூட நடிச்சேன். இப்போ பையன் பக்கத்துல இருக்கான், அவன் எப்போ நடிக்க போறான் தெரில.
இதில் பல கதைகள் உள்ளன – சாமானியர்களைப் பற்றிய ஒரு மலைப்பகுதி கதை, சாய் பல்லவியின் கதை, தனுஷ் சாரின் கதை மற்றும் பல. நான் கதை சொல்லப்போவதில்லை. எனக்கு 45 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது, ஆனால் 6 மாசம் ஆச்சு படம் முடிய. நைட் ஓட நைட் ஆ ஷூட்டிங். கடதல் காரன் கதையா இரவு ல தான் எடுக்க முடியும் ங்கறான். ஒண்ணும் பண்ண முடியாது. என் பேச்சு ஜாலியாக இருந்தாலும் படம் சீரியஸாக இருக்கும். அது உங்கள் தோலைத் தொடும்.
Also Read… திரையரங்குகளில் கொண்டாடப்படும் ராமாயணா படம் – மக்களின் விமர்சனம் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Naan Rajini sir kooda nadichen.
Ippo Dhanush kooda nadikkiren.
Avan paiyan pakkathula ukkandhirukkaan. Avan eppo act pannuvaan-nu theriyala! 😂~ #Mammootty Speech @ #OM Audio Launch ❤️ https://t.co/diSNzduvUk
— All Hail The King 👑 (@HardworkWinner) November 7, 2026
Also Read… இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்… ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை குறித்தது படக்குழு!