இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்… ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை குறித்தது படக்குழு!
Jailer 2 Movie OTT Release Update | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர். அது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி இருந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாகத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து இந்த ஜெயிலர் 2 (Jailer 2) படத்திலும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் பாக இறுதியில் ரஜினிகாந்த் அவரது மகனை சுடுவது போல சத்தம் மட்டும் கேட்கும். அதோடு படம் முடிந்த நிலையில் அவர் சுட்டதில் மகன் செத்தாரா இல்லையா என்பதே படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் நிறைய வித்யாசங்கள் இருப்பதாகவும் இந்தப் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை குறித்தது படக்குழு:
இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஜெயிலர் 2 படம் வருகின்ற 12-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. மேலும் முதல் பாகமும் இந்த அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… நோ சூர்யா… மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிப்பது இந்த நடிகரோடா? வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
TIGER MUTHUVEL PANDIAN is back. RELOADED 🔥
#Jailer2OnPrime, Nov 12
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @vidya_balan @sunpictures @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu https://t.co/AgpP66EEwT
— prime video IN (@PrimeVideoIN) November 5, 2026
Also Read… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படக்குழு