AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நோ சூர்யா… மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிப்பது இந்த நடிகரோடா? வைரலாகும் தகவல்

Maniratnam New Movie Update | பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்க உள்ள படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நோ சூர்யா… மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிப்பது இந்த நடிகரோடா? வைரலாகும் தகவல்
மணிரத்னம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Nov 2026 13:18 PM IST

கன்னட சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். திரைத்துறையில் இந்திய சினிமாவில் நடிகர்களாவும் தொழில்நுட்ப கலைஞர்களாக இருப்பவர்களும் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதை கனவாக வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகிவ் அரும் படம் இஞ்சி வெல்லம்.

இந்த இஞ்சி வெல்லம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலமாக இவர்களின் கூட்டணி முதன்முறையாக அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இஞ்சி வெல்லம் படத்தின் படப்பிடிப்பு தற்போது பிசியாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிப்பது இந்த நடிகரோடா?

தொடர்ந்து மணிரத்னம் இஞ்சி வெல்லம் படத்தில் பிசியாக பணியாற்றி வரும் நிலையில் அவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில் முன்னதாக இயக்குநர் மணிரத்னம் இரண்டு பெரிய நடிகர்களை ஒன்றாக வைத்து படம் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் யார் என தெரிவிக்கப்பட்டது என்றால் சூர்யா மற்றும் தனுஷ் இவருவரும் இணைந்து நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி சூர்யா நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக நடிகர் நானி அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிபி திருந்துங்கடா அகாடமி.. நகைச்சுவை டாஸ்க்குடன் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஷுவல் ட்ரீட்… மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வெளியான மஹாசக்தி ட்ரான்ஸ் வீடியோ!

Follow Us