AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முகேஷை எவிக்ஷன் ப்ரீ பாஸ் மூலம் சேவ் செய்த டிடிஃஎப் வாசன்.. முத்தழகி – கரீஷ்மா இருவரில் வெளியேறுவது யார்?

Bigg Boss Tamil 10: இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 8வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இன்று (01/11/2026) எவிக்ஷன் ஒன்று உள்ளது. அந்த விதத்தில் முகேஷ், முத்தழகி மற்றும் கரீஷ்மா என மூவர் இருக்கும் நிலையில், முகேஷை எவிக்ஷன் ப்ரீ பாஸ் மூலம் டிடிஃஎப் வாசன் காப்பாற்றியுள்ளார். இது குறித்து வைரலாகும் ப்ரோமோ இணையத்தில் பரவிவருகிறது.

முகேஷை எவிக்ஷன் ப்ரீ பாஸ் மூலம் சேவ் செய்த டிடிஃஎப் வாசன்.. முத்தழகி – கரீஷ்மா இருவரில் வெளியேறுவது யார்?
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2026 19:44 PM IST

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 8 வரங்களை கடந்துள்ளது. கடந்த வாரத்தில் ஷமா இந்த நிகழ்த்தியிலிருந்து வெளியேறிய நிலையில், மொத்தம் 15 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்தனர். மேலும் இந்த வாரத்தில னைத்து போட்டியாளர்களும் எவிக்ஷன் நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். அந்த விதத்தில் இந்த எவிக்ஷனில் இறுதியாக முகேஷ் (Mukesh), முத்தழகி (Muthazhagi) மற்றும் கரீஷ்மா (Karishma) போன்ற போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த மூவரின் ஒருவர் இன்று (01/11/2026) வெளியிடவேண்டும் என்ற நிலையில், டிடிஃஎப் வாசன் மற்றும் ஜேசனிடம் எவிக்ஷன் ப்ரீ பாஸ் உள்ளது. அந்த விதத்தில் இதில் எந்த போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பாலிடிக்ஸ் பாலிடிக்ஸ் சேர போறேன்.. கலக்கலாக வெளியானது சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர்!

முகேஷை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிய டிடிஃஎப் வாசன்:

தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவில், “இந்த வாரத்தில் எவிக்ஷன் நாமினேஷனில் மொத்தம் 3 போட்டியாளர்கள் இருப்பதாக விஜய் சேதுபதி தெரிவிக்கிறார். முகேஷ், முத்தழகி மற்றும் கரீஷ்மா. இதில் யாரையாவது எவிக்ஷன் ப்ரீ பாஸ் வைத்திருக்கும் ஜேசன் மற்றும் டிடிஃஎப் வாசன் காப்பாற்றுகிறீர்களா என விஜய் சேதுபதி கேட்டிருந்தார். உடனே ஜேசன் தான் பயன்படுத்தவில்லை என கூறிவிட்டார்.

இதையும் படிங்க: நான் எதற்கும் தயார்.. சக போட்டியாளர்களால் கடுப்பாக பேசிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

ஆனால் டிடிஃஎப் வாசன், தனது எவிக்ஷன் ப்ரீ பாஸை முகேஷிற்காக பயன்படுத்துவதாக கூறிவிட்டார். அந்த விதத்தில் இறுதியாக கரீஷ்மா மற்றும் முத்தழகி என இருவர் இருக்கும் நிலையில், இதில் கரீஷ்மா வெளியேற்றப்பட்டுள்ளாராம். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 56வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸில் இந்த 8வது வாரத்தின் இறுதியில் கரீஷ்மா வெளியேட்பட்டுள்ளாராம். அந்த விதத்தில் தற்போது இப்போட்டியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் வரும் வாரத்தில் எவிக்ஷன் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான். மேலும் இந்த வாரத்தில் அக்ஷிதாவை விஜய் சேதுபதி கேள்விகளால் பொளந்து தள்ளிய நிலையில், இந்த வாரம் சிறப்பாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிடிஃஎப் வாசன், எவிக்ஷன் ப்ரீ பாஸை வேறு எந்த போட்டியாளருக்காவது பயன்படுத்தியிருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

Follow Us