AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் அக்‌ஷிதாவை கேள்விகளால் பொளந்து எடுக்கும் விஜய் சேதுபதி – வெளியானது புரோமோ வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 8-வது வாரத்திற்கான வீக்கெண்ட் எபிசோடில் நேற்றைய எபிசோட் மற்றும் இன்றைய எபிசோட் என இரண்டு நாட்களிலுமே அதிக அளவில் அக்‌ஷிதாவை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார் விஜய் சேதுபதி.

பிக்பாஸில் அக்‌ஷிதாவை கேள்விகளால் பொளந்து எடுக்கும் விஜய் சேதுபதி – வெளியானது புரோமோ வீடியோ!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Nov 2026 13:34 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து தொடங்கியதில் இருந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே காமென் மேன் ஷோ என்ற நிகழ்ச்சியினை இந்த குழு நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது மக்களில் இருந்து மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அவர்களை தவிற சமூக வலைதளப் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் வாரம் முழுவதும் நடைப்பெற்ற டாஸ்க், போட்டியாளர்களின் செயல்கள் அதில் உள்ளது நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் வெளிப்படையாக பேசும் தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதி கடந்த 8-வது வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து இந்த வீக்கெண்ட் எபிசோடில் பேசுகிறார்.

பிக்பாஸில் அக்‌ஷிதாவை கேள்விகளால் பொளந்து எடுக்கும் விஜய் சேதுபதி:

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்றைய வீக்கெண்ட் எபிசோடிலும் சரி இன்றைய வீக்கெண்ட் எபிசோடிலும் சரி அதிக அளவில் அக்‌ஷிதாவை சுற்றியே பேச்சுகள் உலா வருகின்றது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அக்‌ஷிதா டாஸ்கின் போது தனது அண்ணன் அவினாஷிற்கு ஆதரவாக செயல்பட்டது குறித்தும் அந்த டாஸ்கில் நீங்கள் ஏன் விளையாடவில்லை அந்த விளையாட்டு எங்கு போனது என்பது குறித்தும் விஜய் சேதுபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார். அவர் கேள்விகளால் பொளந்து எடுக்கும் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Benz Movie: ராகவா லாரன்ஸ் பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட பென்ஸ் படக்குழு!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sadanandham: இளையராஜாவின் கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்!!

Follow Us