AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நம்ப முடியா இயற்கை அற்புதம்.. 100 நாள் காத்திருப்புக்கு பின் குட்டி ஈனும் விசித்திர விலங்கு.. என்ன அது!

Brown Hyena Give Birth 100 Daysn : உலகில் வாழும் விலங்கினங்களில் எந்த விலங்கு 100 நாள்கள் வயிற்றில் குட்டியை சுமந்து 100- ஆவது நாளில் குட்டியை ஈன்றெடுக்கும் என்ற ஆச்சர்யமான தகவலை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

நம்ப முடியா இயற்கை அற்புதம்.. 100 நாள் காத்திருப்புக்கு பின் குட்டி ஈனும் விசித்திர விலங்கு.. என்ன அது!
பழுப்பு நிற கழுதைப்புலி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Nov 2026 14:38 PM IST

விலங்குகளின் கர்ப்ப காலத்தை பொருத்தவரை வெவ்வேறு வகையில் மாறுபட்ட கால அட்டவணைகள் பின்பற்றுகின்றன. சில விலங்குகள் சில வாரங்களிலேயே குட்டிகள் ஈனும் நிலையில், மற்ற விலங்கினங்கள் தங்கள் குட்டிகளை பல மாதங்கள் வயிற்றில் சுமந்து பின்னர் ஈனுகின்றன. ஆனால், எந்த விலங்கின் கர்ப்ப காலம் சுமார் 100 நாட்கள் இருக்கும் என்று தெரியுமா. அந்த ஆச்சரியமான தகவல் இந்த பதிவில் உள்ளது. இந்த வசீகரமான விலங்குகள், அவற்றின் அடர்த்தியான பலுப்பு நிற உரோமங்கள், இரவு நேர பழக்கங்கள் மற்றும் அசாதாரண சமூக நடத்தைக்காக அறியப்படுகின்றன. அந்த விலங்கினங்களை உற்று நோக்கினால் அதன் கர்ப்பம், வாழும் மற்றும் புதிதாக பிறந்த குட்டிகள் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள் தெரிய வரும். இதற்கான விடை பழுப்பு கழுதை புலி ஆகும்.

பாராஹையீனா புருனியா என்னும் பழுப்புநிற கழுதைப்புலி

இது பாராஹையீனா புருனியா என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் பழுப்பு கழுதைப்புலி குட்டி ஈனுவதற்கு முன்பு சுமார் 97 நாட்கள் தன் குட்டிகளை வயிற்றில் சுமக்கிறது. சில குறிப்புகள் அதன் கர்ப்ப காலம் 90 முதல் 100 நாட்கள் வரை இருக்கும் என்று தெரிவிக்கின்றன. ஒரே ஒரு குட்டியை ஈனும் பல விலங்குகளை போல இல்லாமல் பழுப்பு நிற கழுதை புலிகளால் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈன முடியும். அனிமல் டைவர்சிட்டி வெப் தகவல்களின் அடிப்படையில், அவற்றின் சராசரி ஈனுதல் எண்ணிக்கை சுமார் 2, 3 குட்டிகள் ஆகும்.

மேலும் படிக்க: கட்டுக்கட்டாக பணத்துடன் கண்டெய்னர் லாரி.. துப்பாக்கியுடன் சுற்றி நின்ற போலீசார்.. சேலத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

பழுப்பு நிற கழுதைப்புலிக்கு 100 நாள்கள் கர்ப்ப காலம்

இதனால், பழுப்பு நிற கழுதை புலியானது கிட்டத்தட்ட 100 நாட்கள் கர்ப்ப காலம் கொண்ட ஒரு விலங்கினத்துக்கு ஒரு சுவாரசியமான உதாரணமாக திகழ்கிறது. பழுப்பு நிற கழுதைப்புலி, அதன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து வேறுபடுத்தும் ஒரு தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது. அது நீளமான, அடர்த்தியான பழுப்பு நிற கிராமத்தையும், கூர்மையான காதுகளையும் தெளிவாக தெரியும் வரிகள் உடைய கால்களையும் கொண்டுள்ளது. அதன் முன் கால்கள், பின் கால்களை விட நீளமாக இருப்பதால் அதன் உடலுக்கு ஒரு சரிவான தோற்றத்தை பெற்றுள்ளது.

குட்டிகளுக்கு 14 மாதங்கள் வரை பாலூட்டும்

பழுப்பு நிற கழுதைப்புலிகள் பொதுவாக தெற்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக வறண்ட பகுதிகள், அரை பாலைவனங்கள், புல்வெளிகள் மற்றும் புதர்காடுகளில் காணப்படுகின்றன. அவை அரிதாக அறியப்படும் கழுதைப்புலி இனமாகும். இந்த வகை விலங்குகள் தனது குட்டிகளுக்கு சுமார் 10 முதல் 14 மாதங்கள் வரை பாலூட்டும். இவை நமீபியா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் வாழ்கிறது.

மேலும் படிக்க: சென்னை ரயிலில் நள்ளிரவில் டமார் சத்தம்.. நெருப்பு பொறியுடன் வெடித்து சிதறிய பவர் பேங்க்.. அலறியடித்த பயணிகள்!

Follow Us