AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்… 2 வெளிநாட்டினர் உயிரிழப்பு – பெங்களூரூவில் பரபரப்பு சம்பவம்

Bengaluru Hotel Tragedy : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில், மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கர் ஒருவரும், ஹோட்டல் ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர்.

நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்… 2 வெளிநாட்டினர் உயிரிழப்பு – பெங்களூரூவில் பரபரப்பு சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 Oct 2026 20:20 PM IST

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில், மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கர் (America) ஒருவரும், ஹோட்டல் ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகதுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள கான்ராட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டினர், அக்டோபர் 30, 2026 நேற்று) மாலை, ஹோட்டலின் 3வது தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்களை மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மேக்ஸிமிலியன் தைஸ்). இவர் லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் விமானப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். மற்றொருவர், ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஜுராஜ் ஹோர்வாட். இவர் ஐபிஎம் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இதையும் படிக்க : இஸ்ரோவின் அடுத்த சாதனை.. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணின் பாயும் NVS-03 செயற்கைக்கோள்!

காப்பாற்றச் சென்றவர்கள் காயம்

அதே ஹோட்டலில் தங்கியிருந்த அமெரிக்க நாட்டவர் ஒருவரும், நீச்சல் குளப் பணியாளரான 26 வயது இந்திய ஊழியர் ஒருவரும், அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றபோது காயமடைந்தனர். மின்சாரம் பாய்வதை உணர்ந்த நிலையிலும், அமெரிக்கர் நீச்சல் குளத்தில் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து 4 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை அறிக்கை

இதனையடுத்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அக்டோபர் 30, 2026 மாலை சுமார் 5.10 மணியளவில், நான்கு பேரும் மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் மேபல் தெரிவித்தார். ஜெர்மனி நாட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும்போதே உயிரிழந்திருந்தார். ஸ்லோவாக்கியா நாட்டவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையான சிபிஆர் அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

தலைவலி மற்றும் அதிர்ச்சியுடன் அனுமதிக்கப்பட்ட அமெரிக்கர், தற்போது நலமாக உள்ளார். அதிர்ச்சி நிலையில் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் ஊழியரும் தற்போது நலமாக உள்ளார். இருவரும் அக்டோபர் 31, 2026 இன்று வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கியதற்கான காரணம் குறித்து இதுரவை தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிக்க : ‘சூப்பர் எல்நினோ’ கோரத்தாண்டவம்.. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 55,000 பேர் உயிரிழக்கலாம்.. நடக்கப்போகும் விபரீதம்!!

ஹோட்டல் நிர்வாகம் விளக்கம்

இந்தச் சம்பவம் தொடர்பாக, கான்ராட் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு விருந்தினர்களின் உயிரிழப்பு ஆழ்ந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. சம்பவத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், உள்ளூர் அதிகாரிகளின் விரிவான விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us