படுக்கைக்கு அடியில் படியும் தூசி; தரையில் தங்கும் முடிகள்! அலட்சியம் காட்டும் இந்தியர்கள்.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்..
Household Cleaning: வீடுகளைச் சுத்தம் செய்ய 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை செலவிடுவதாகப் பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர். 11% பேர் இரண்டு மணி நேரம் வரை செலவிடுவதாகக் கூறியுள்ளனர். மேலும், 36% பேர் தரையில் மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளின் முடிகள் தங்கிவிடுவதை முக்கியப் பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அக்டோபர் 29, 2026: இந்தியாவில் வீடுகளைச் சுத்தம் செய்யும்போது, படுக்கைகள் மற்றும் தளவாடங்களுக்குக் கீழே உள்ள பகுதிகளைப் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறுவதாக டைசன் நிறுவனத்தின் ‘How India Cleans’ ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தரையில் முடிகள் தங்கிவிடுவது, சுத்தம் செய்த பிறகும் மீண்டும் தூசி படிவது, மூலைகளைச் சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்படுவது போன்றவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன.
இந்தியாவின் ஏழு நகரங்களில் 650-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 52% பேர் படுக்கைகள் மற்றும் தளவாடங்களுக்குக் கீழே உள்ள இடங்களை அடிக்கடி சுத்தம் செய்யத் தவறுகின்றனர். 48% பேர் மூலைகள், விளிம்புகள் மற்றும் சுவரோரப் பகுதிகளைச் சுத்தம் செய்வதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மகிழ்ச்சிக்கு இனி அலைய தேவையில்லை: ஆக்ஸ்போர்டு தரும் 3 அற்புத ஃபார்முலா!
தூசி, முடிகளை அகற்றுவதில் சிக்கல்
வீடுகளைச் சுத்தம் செய்ய 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை செலவிடுவதாகப் பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர். 11% பேர் இரண்டு மணி நேரம் வரை செலவிடுவதாகக் கூறியுள்ளனர். மேலும், 36% பேர் தரையில் மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளின் முடிகள் தங்கிவிடுவதை முக்கியப் பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர். சுத்தம் செய்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தூசி படிவதாக 38% பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: எரிமலை சாம்பலில் முட்டையிட்டு அடைகாக்கும் விசித்திர பறவை…
தரையைச் சுத்தம் செய்யும் கருவிகளில் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்
இந்திய வீடுகளில் பல்வேறு வகையான தரைகள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 51% வீடுகளில் மார்பிள் தரையும், 49% வீடுகளில் செராமிக் அல்லது விட்ரிஃபைடு டைல்ஸும், 43% வீடுகளில் கிரானைட் தரையும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 72% வீடுகளில் கார்பெட் அல்லது விரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
தரையைச் சுத்தம் செய்யும் கருவிகளை வாங்கும்போது, 61% பேர் நவீன தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். 54% பேர் சுத்தம் செய்யும் திறனையும், 49% பேர் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையையும் கருத்தில் கொள்கின்றனர்.
ரூ.79,900 விலையில் புதிய வாக்யூம் கிளீனர்
இந்த ஆய்வுடன், டைசன் நிறுவனம் தனது V16 Piston Animal கம்பியில்லா வாக்யூம் கிளீனரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் தரையின் வகையைத் தானாகக் கண்டறியும் தொழில்நுட்பம், முடிகள் சிக்குவதைத் தடுக்கும் வசதி மற்றும் மறைந்திருக்கும் தூசியைக் கண்டறிய LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 நிமிடங்கள் வரை செயல்படும் திறன் கொண்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.