AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேக்-அப் ஸ்டோர்க் என்றால் என்ன? மாரடைப்பு அபாயத்தை உணர்த்தும் எச்சரிக்கை

Wake Up Stroke: தூங்கி எழுந்ததும் ஏற்படும் கடுமையான தலைச்சுற்றல், பார்வை மங்குதல் மற்றும் ஒரு பக்க பலவீனம் ஆகியவை 'வேக்-அப் ஸ்டோர்க்' எனப்படும் ஆபத்தான பக்கவாதத்தின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த எச்சரிக்கை அறிகுறிகளைச் சாதாரண உடல் சோர்வு அல்லது நரம்புப் பிடிப்பு என்று கருதி மக்கள் பலரும் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர்.

வேக்-அப் ஸ்டோர்க் என்றால் என்ன? மாரடைப்பு அபாயத்தை உணர்த்தும் எச்சரிக்கை
வேக் அப் ஸ்டோர்க்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 29 Oct 2026 13:00 PM IST

காலை வேளையில் விழித்தெழும் போது ஏற்படும் அசாதாரண உடல் மாற்றங்களை (Health Issue) எக்காரணம் கொண்டும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இரவில் நன்றாகத் தூங்கிவிட்டு காலையில் எழும்போதே பக்கவாத பாதிப்பு ஏற்படுவது மருத்துவ உலகில் ‘வேக்-அப் ஸ்டோர்க்’ என்று அழைக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் திடீர் பலவீனம் மற்றும் மரத்துப்போதல் ஆகியவை மூளையில் இரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறியாகும். எந்தவிதமான காரணமும் இல்லாமல் திடீரென ஏற்படும் கடுமையான தலைச்சுற்றல் மற்றும் சமநிலை இழப்பு போன்றவையும் பக்கவாதத்தின் தீவிர பாதிப்புகளை உணர்த்தும். அதுமட்டுமின்றி, திடீரெனப் பார்வை மங்குவது அல்லது ஒரே பொருள் இரண்டாகத் தெரிவது போன்ற பார்வைக் கோளாறுகளையும் உடனடியாக கவனிக்க வேண்டும். இந்த ஆபத்தான அறிகுறிகளைத் தூக்கக் களைப்பு அல்லது சோர்வு என்று தவறாக நினைத்து மக்கள் அலட்சியப்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக வந்து முடியும்.

Also Read: தூக்கமின்மைக்கு குட்பை சொல்லுங்கள்! நிம்மதியான உறக்கத்தைத் தரும் 7 டிப்ஸ்…

உடலின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் பலவீனம்

தூங்கி எழுந்தவுடன் முகம் ஒரு பக்கமாக கோணுவது, கைகளை உயர்த்த முயலும் போது ஒரு கையை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் கீழே தாழ்வது போன்ற அறிகுறிகள் ஒரு பக்க மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதற்கான முக்கிய எச்சரிக்கையாகும். பலர் இதனைத் தூங்கும் போது உடலில் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு என்று தவறாக நினைத்து அலட்சியம் செய்கிறார்கள். ஆனால், இந்த ஒரு பக்க பலவீனம் மற்றும் மரத்துப்போகும் உணர்வு ஆகியவை மூளையில் ஏற்படும் பக்கவாதத்தின் முதன்மையான அறிகுறியாகும்.

திடீர் தலைச்சுற்றல் மற்றும் சமநிலை இழப்பு

எந்தவித காரணமும் இன்றி திடீரென தலைசுற்றுவது, நடப்பதில் சிரமம் ஏற்படுவது மற்றும் உடலின் சமநிலையை இழந்து கீழே விழுவது போன்றவையும் பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். மூளையின் பின் பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் போது இந்த சமநிலை இழப்பு பிரச்சினை தீவிரமடைகிறது. இதனைப் சாதாரண மயக்கம் அல்லது காது கோளாறு என்று கருதி காலத்தை வீணடிப்பது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

Also Read: தூக்கமின்மைக்கு குட்பை சொல்லுங்கள்! நிம்மதியான உறக்கத்தைத் தரும் 7 டிப்ஸ்…

பார்வைக் கோளாறுகள் மற்றும் இரட்டைப் பார்வை

பார்வை திடீரென மங்குதல், இரண்டு பார்வையாக தெரிவது (Double vision) அல்லது ஒரு கண்ணில் முழுமையாக பார்வை தெரியாமல் போவது போன்ற திடீர் மாற்றங்கள் ஏற்படும் போது உடனடியாக எச்சரிக்கையாக வேண்டும். கண்களில் கோளாறு என்று நினைத்து கண் மருத்துவரை நாடுவதை விட, இது மூளையின் பார்வை தொடர்பான பகுதியில் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us