AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மோசடி வழக்கு : தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சரண்

Former DMK MLA Surrenders : தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அக்டோபர் 29, 2026 இன்று சரணடைந்தார்.

மோசடி வழக்கு : தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சரண்
முன்னாள் முத்துக்குமார் எம்எல்ஏ
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2026 13:24 PM IST

சென்னை, அக்டோபர் 29 : தனியார் பள்ளிகளுக்கு (Private Schools) அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அக்டோபர் 29, 2026 இன்று சரணடைந்தார். இதனையடுத்து அவரை நவம்பர் 12, 2026 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சரண்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டதாக, தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த, அக்டோபர் 26, 2026 அன்று கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அக்டோபர் 28, 2026 நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், கீழ்க்காணும் விவரங்கள் குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகப் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.யார் யாரிடமிருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது, இடைத்தரகர்களாகச் செயல்பட்ட பிற நபர்கள் யார், பணப் பரிமாற்றங்கள் எவ்வாறு நடைபெற்றன என்பது குறித்து விசாரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

முத்துக்குமார் சரண்

இந்நிலையில், நீண்ட நாள்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், அக்டோபர் 29, 2026 இன்று காலை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். யாருடைய அழுத்தமும் இல்லாமல், தாமாகவே முன்வந்து சரணடைந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரது சரணை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நவம்பர் 12 வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், முத்துக்குமாருக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்க வேண்டும், தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், சொந்த உடைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் அவரைத் துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையும் படிக்க : அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் நியமனம் – தமிழக அரசின் முடிவுக்கு வலுக்கும் கண்டனம்

அன்பில் மகேஸ் மனுக்கள் ஒத்திவைப்பு

இதையடுத்து, அன்பில் மகேஸ் தொடர்பான மூன்று மனுக்கள் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது அன்பில் மகேஸின் ஜாமீன் மனு, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனு, அவரை 5 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரிய போலீஸ் மனு ஆகிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் காவல்துறைத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, மூன்று மனுக்கள் மீதான விசாரணையையும் நவம்பர் 2, 2026 ஒத்திவைத்தார்.

Follow Us