AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு – நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு

Mullaperiyar Dam Safety Study : முல்லைப் பெரியாறு அணையின் (பாதுகாப்பு தொடர்பான ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக, அணை அமைந்துள்ள பகுதியில் நில அதிர்வு ஆய்வு மேற்கொள்வதற்கு ரூ.43 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு – நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
முல்லை பெரியாறு அணை
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2026 07:21 AM IST

சென்னை, அக்டோபர் 29 : முல்லைப் பெரியாறு அணையின் (Mullaperiyar Dam) பாதுகாப்பு தொடர்பான ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக, அணை அமைந்துள்ள பகுதியில் நில அதிர்வு ஆய்வு மேற்கொள்வதற்கு ரூ.43 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் எந்த அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அதனால் அணைக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்பதை அறிவியல் ரீதியாகக் கணக்கிடுவதே இந்த ஆய்வின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் நில அதிர்வு ஆய்வுக்கு ரூ.43 லட்சம்

இதுதொடர்பாக, தமிழக நிதித் துறையின் கொள்முதல் பிரிவு சார்பில், அக்டோபர் 21 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) கீழ் ஹைதராபாதில் இயங்கும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI), முல்லைப் பெரியாறு அணையில் இடம் சார்ந்த நில அதிர்வு ஆய்வை (Site-specific Seismic Study) மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கான மதிப்பீட்டுச் செலவு ரூ.43 லட்சம் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ராணிப்பேட்டையில் குழந்தை கடத்தல்.. தவெக ஆதரவாளர் அதிரடி கைது.. வேலூர் மத்திய சிறையில் அடைப்பு!

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998-இன் பிரிவு 16(பி.பி)-இன் கீழ் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் வெளியிட்டுள்ளார்.

இடம் சார்ந்த நில அதிர்வு ஆய்வு

ஒரு அணை அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்தில், எதிர்காலத்தில் எந்த அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும், அதனால் அணைக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்பதை அறிவியல் ரீதியாகக் கணக்கிடுவதே இந்த ஆய்வின் நோக்கம். அப்பகுதியின் புவியியல் அமைப்பு, அருகிலுள்ள நிலப்பிளவுகள், கடந்த கால நிலநடுக்கப் பதிவுகள் உள்ளிட்டவை இதில் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் முடிவுகள், அணையின் கட்டமைப்புப் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கும், தேவைப்பட்டால் வலுப்படுத்தும் பணிகளைத் திட்டமிடுவதற்கும் அடிப்படையாக அமையும்.

இதையும் படிக்க : செங்கல்பட்டில் அதிர்ச்சி.. மின் கட்டணத்தை அபேஸ் செய்த கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்.. அதிரடி நடவடிக்கை!

குடிநீர் ஆதாரமான முல்லை பெரியாறு அணை

1895-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், தமிழகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களின் பாசனத்துக்கும் குடிநீருக்கும் இந்த அணை முக்கிய ஆதாரமாக உள்ளது. அணையின் பாதுகாப்பு, குறிப்பாக நிலநடுக்க அபாயம் குறித்து, கேரளம் நீண்ட காலமாகக் கவலை தெரிவித்து வருகிறது. அணை பாதுகாப்பானது என்பது தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடு. இந்தச் சூழலில், தேசிய அளவில் புகழ்பெற்ற அறிவியல் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நில அதிர்வு ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

Follow Us