AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்.. தமிழ்நாடு அரசு அரசாணை!

Tamil Nadu Free Bus Travel Expanded | தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கான அரசாணையை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்.. தமிழ்நாடு அரசு அரசாணை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Oct 2026 08:03 AM IST

சென்னை, அக்டோபர் 29 : தமிழகத்தில் (Tamil Nadu) மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் (Free Bus Scheme) விரிவுப்படுத்த உள்ளது. ஏற்கனவே, மகளிருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அது மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தான், பல்வேறு வகையான அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை (Tamil Nadu Government) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அரசாணை

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் பாதிப்பு தன்மை கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவருக்கு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள்.. கோவை தனியார் கல்லூரி விடுதியில் பரபரப்பு!

பயண திட்டத்தை விரிவுப்படுத்தி உத்தரவு

இதற்கிடையே தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பயன்படுத்தும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் உதவியாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்து கழகங்களில் தாழ்தள பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகள், எல்.எஸ்.எஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் பயண திட்டம் விரிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் மையங்கள்? மாணவர்களைக் குறிவைக்கும் தனுஷ்

ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை மேலும் விரிவுப்படுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us