AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் நியமனம் – தமிழக அரசின் முடிவுக்கு வலுக்கும் கண்டனம்

Government Outsourcing Recruitment Rules : தமிழக அரசுத் துறைகள், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை, அரசு நிறுவனமான தமிழ்நாடு அயல்நாட்டு மனிதவளக் கழகம் மூலமாக மட்டுமே நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் நியமனம் – தமிழக அரசின் முடிவுக்கு வலுக்கும் கண்டனம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2026 08:13 AM IST

சென்னை, அக்டோபர் 29 : தமிழக அரசுத் துறைகள், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை, அரசு நிறுவனமான தமிழ்நாடு அயல்நாட்டு மனிதவளக் கழகம் மூலமாக மட்டுமே நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் (Teachers) கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் நியமனம்

அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், அக்டோபர் 21 அன்று இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகளுக்கான மனிதவளத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் முதன்மை முகமையாக OMCL நிறுவனம் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி எந்த அரசுத் துறையும் ஒப்பந்தப் பணியாளர்களை நேரடியாகவோ, தனியார் மனிதவள முகமைகள் மூலமாகவோ நியமிக்க முடியாது. அனைத்து ஒப்பந்த நியமனங்களும் அரசு நிறுவனமான OMCL வழியாகவே நடைபெறும்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – எங்கெல்லாம் மழை பெய்யும்?

ஏன் இந்த மாற்றம்?

தனியார் முகமைகள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும்போது, தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவது, பணியாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படாதது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. இதைத் தடுத்து, ஒப்பந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜாக்டோ – ஜியோ எதிர்ப்பு

இந்த அரசாணைக்கு ஜாக்டோ – ஜியோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அரசின் முடிவு சமூக நீதிக்கு எதிரானது. தமிழகம் இதுவரை பாதுகாத்து வரும் 69% இடஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் இந்த அரசாணை எதிரானது. இதனால் நிரந்தரப் பணியிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் அரசுத் துறைகளின் அடிப்படைப் பணியிடங்களை முழுமையாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இதையும் படிக்க : மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள்.. கோவை தனியார் கல்லூரி விடுதியில் பரபரப்பு!

மேலும் தேர்தல் அறிக்கையில் நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அதற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசே இவ்வாறு செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஜாக்டோ – ஜியோ, இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், காலிப் பணியிடங்களை 69% இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி அடிப்படையில் நிரந்தரமாக நிரப்ப வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Follow Us