AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.165 ஆக உயர்ந்த நிலக்கடலை விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி!

Tamil Nadu Groundnut Price Soars | தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் மிக ஆர்வமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காரணமாக கடைகளில் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் நிலக்கடலை விலை கிலோ ரூ.165 ஆக உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.165 ஆக உயர்ந்த நிலக்கடலை விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Oct 2026 07:07 AM IST

திருப்பூர், அக்டோபர் 29 : தமிழகத்தில் (Tamil Nadu) தீபாவளி பண்டிகையை (Diwali Festival) முன்னிட்டு நிலக்கடலை கிலோ ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகள், கடைகள் என பல இடங்களில் இனிப்புகள் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நிலக்கடலை பயன்படுத்தப்படும் நிலையில், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலக்கடலை விலை உயர்ந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளியை முன்னிட்டு அதிரடியாக உயர்ந்த நிலக்கடலை விலை

தமிழகத்தில் பொதுமக்களால் கோளாகலமாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி உள்ளது. இந்த பண்டிகையின்போது பொதுமக்கள் புத்தாடை எடுப்பது, இனிப்பு தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுப்பது, பட்டாசு வெடிப்பது என வெகு சிறப்பாக கொண்டாடுவர். குறிப்பாக, தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கும். இதன் காரணமாக வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவர். அந்த வகையில் தான் இந்த முறை விவசாயிகளுக்கு இந்த தீபாவளி சிறந்ததாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : செங்கல்பட்டில் அதிர்ச்சி.. மின் கட்டணத்தை அபேஸ் செய்த கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்.. அதிரடி நடவடிக்கை!

கிலோ ரூ.165 ஆக உயர்ந்த நிலக்கடலை – விவசாயிகள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னதாக வீடுகளில் இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்வது வழக்கம். தற்போது நடைமுறை மாறியுள்ள நிலையில், பெரும்பாலான குடும்பங்கள் கடைகளில் இந்த இனிப்பு மற்றும் பலகாரங்களை வாங்கி தங்களது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இதையும் படிங்க : ஜெம் வீரமணி வழக்கில் சிக்குகிறாரா ஜான் பாண்டியன்.. புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை.. முழு விவரம் என்ன!

இந்த நிலையில் தான் தமிழகத்தில் கடலை எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு ஏராளமான ஆர்டர்கள் குவியத்தொடங்கியுள்ள நிலையில், ஒரு கிலோ நிலக்கடலையின் விலை ரூ.165 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வு காரணமாக நிலக்கடலை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us