மோகன்லால் படத்தை இயக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது – இயக்குநர் ஜித்து மாதவன்
Director Jithu Madhavan talks about Mohanlal movie | மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஜித்து மாதவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் மோகன்லால் உடனான படம் நடைபெறாமல் போனது குறித்து வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan). இவரது எழுத்திலும் இயக்கத்திலும் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் சீன். நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நஸீம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் மோகன்லால் படம் தடைப்பட்டது குறித்து பேசி உள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மோகன்லால் படத்தை இயக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது:
மோகன்லால் அவர்களை வைத்து நான் திட்டமிட்டிருந்த திரைப்படம் கைவிடப்பட்டது. வேறொரு நடிகரை வைத்து அந்தப் படத்தை உருவாக்குவது எளிதான காரியமல்ல. நான் அந்தத் திரைக்கதையை மோகன்லாலை மனதில் கொண்டே எழுதினேன்; எனவே, திடீரென்று வேறொரு நடிகருக்காக அதை மாற்றியமைக்க என்னால் முடியாது.
எனக்குத் தெரிந்தவரை, இந்தப் படத்திற்குத் தேவைப்பட்ட படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அந்த எண்ணிக்கையைக் குறைத்து, இயல்பான கால அளவிற்குள் கொண்டுவர முயற்சி செய்தேன், ஆனால் அந்தப் படத்தைப் பொறுத்தவரை அது சாத்தியப்படவில்லை. இதில் நிறைய சண்டைக் காட்சிகள் இருப்பதால், படப்பிடிப்பிற்கு அதிக நாட்கள் தேவைப்படுகின்றன; இவ்வளவு நீண்ட நாட்களை ஒதுக்குவது எளிதான விஷயமல்ல. லலேட்டன் (மோகன்லால்) தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு நேர்காணலில் இதைப் பற்றிச் சொல்வது சரியானதா என்று எனக்குத் தெரியவில்லை.
Also Read… பிக்பாஸில் டாஸ்கின் போது மோதிக்கொள்ளும் டிடிஎஃப் வாசன் – அக்ஷிதா… வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
My #Mohanlal movie has been dropped. It’s not easy to do it with somebody else. I wrote it with #Mohanlal in mind, and I can’t suddenly switch to somebody else and write it.
According to my understanding, the number of shooting days was too much. I tried to reduce it and bring it down to a normal number of days, but it wasn’t possible with that movie. It requires a lot of days to shoot, with a lot of action sequences, so it’s not easy to spend so many days. #Lalettan is continuously doing movies. I don’t know if it’s the right thing to say in an interview.
– #JithuMadhavan https://t.co/6iSKbCum03— Movies Singapore (@MoviesSingapore) October 27, 2026
Also Read… கடும் நெடும் பயணங்கள்… டோரதி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்