பிக்பாஸில் டாஸ்கின் போது மோதிக்கொள்ளும் டிடிஎஃப் வாசன் – அக்ஷிதா… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் கௌபாய் - மைனிங் மாஃபியா டாஸ்க் நடைபெறுகின்றது. இந்த டாஸ்கில் விளையாடும் போது டிடிஎஃப் வாசன் மற்றும் அக்ஷிதா இடையே மோதல் ஏற்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 7 வாரங்கள் முடிவடைந்து தற்போது 8-வது வாரம் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் டாஸ்க் விறுவிறுப்பாக சென்று வருகின்றது. அந்த வகையில் இந்த 8-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் கௌ பாய்ஸ் மற்றும் மைனிங் மாஃபியாஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து வீட்டில் விளையாடுகிறார்கள் போட்டியாளர்கள். இவர்களில் வெற்றிபெறும் அணிக்கு வீட்டில் உள்ள பொருட்களைப் வசதிகளையும் பயண்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த டாஸ்க் நேற்று தொடங்கிய போது ஒரு போட்டியில் கௌபாய்ஸ் மற்றொரு போட்டியில் மைனிங் மாஃபியா என இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் திட்டம் மற்றும் விளையாட்டு பார்வையாளர்களை சுவாரஸ்யமாக பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் டாஸ்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து நிகழ்ச்சி குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.




பிக்பாஸில் டாஸ்கின் போது மோதிக்கொள்ளும் டிடிஎஃப் வாசன் – அக்ஷிதா:
அதன்படி இன்று 52-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் கௌபாய்ஸ் மற்றும் மைனிங் மாஃபியா இடையே ஒரு சலசலப்பு ஏற்படுகின்றது. இதில் அக்ஷிதா டிடிஎஃப் வாசனை தாக்குகிறார். பிறகு இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. அதில் அக்ஷிதா சற்று கடுமையாக டிடிஎஃப் வாசனிடம் நடந்துகொள்வது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day52 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/8VmRtxbjUM
— Vijay Television (@vijaytelevision) October 28, 2026
Also Read… ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ரோடி தீம் வீடியோ