AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்

Inji Vellam Movie Release Update | தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் இஞ்சி வெல்லம் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
இஞ்சி வெல்லம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Oct 2026 14:19 PM IST

தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் படம் என்றாலே அதிக அளவில் ரசிகர்கள் கொண்டாடுவது இயக்குநர் மணிரத்னத்தின் படம் தான். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே தற்போதும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. காதலை அதிக அளவில் அழகாக காட்டிய படங்களை இயக்கிய இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் இஞ்சி வெல்லம். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் ஒரு ரொமாண்டிக் ட்ராமா படம் உருவாகி வருவது ரசிகர்களிடையே அதிக அளவில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாகவும் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா?

இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, இஞ்சி வெல்லம் திரைப்படம் தற்போது 2027-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் புருஷன் திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையான ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் இந்த காதல் திரைப்படத்தை மணிரத்னம் பொங்கல் பண்டிகையன்று வெளியிட வாய்ப்பிருந்தும், ரெட் ஜெயண்ட் ஸ்டுடியோஸ் (Red Giant Studios) நிறுவனமே இரண்டு படங்களையும் விநியோகம் செய்வதால், இந்தத் திரைப்படங்கள் தனித்தனியாக வெளியாகும் போது அவற்றுக்கிடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… பிக்பாஸில் இந்த வாரம் 15 பேரும் நாமினேஷனில் உள்ளனர்… யார் வெளியேற வாய்ப்பு?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 12 வருசத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படம்… நஸ்ரியா சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ

Follow Us