IND vs NZ 3rd T20: பவர்பிளேவில் பயம் காட்டிய இந்திய தொடக்க ஜோடி.. 118 ரன்கள் குவித்து உலக சாதனை..!
Team India Fastest T20 Powerplay Record: இந்திய அணியின் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனையை படைத்தனர். இந்த போட்டியில் இந்திய அணி பவர்பிளேயில் மட்டும் மொத்தமாக 118 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது.
வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு (New Zealand Cricket Team) எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் (Indian Cricket Team) தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனையை படைத்தனர். இந்த போட்டியில் இந்திய அணி பவர்பிளேயில் மட்டும் மொத்தமாக 118 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 2024-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 113 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா இந்த சாதனையை வைத்திருந்தது.
ALSO READ: டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் படை.. முதலில் பந்துவீசும் இந்திய அணி.!




2.2 ஓவர்களில் 50 ரன்கள்:
1⃣1⃣8⃣ in 6 overs 🤯
#TeamIndia’s Highest powerplay score in Men’s T20Is ‼️
What a show by the openers 🍿
Updates ▶️ https://t.co/zf4CnZQ8CD
#NZvIND https://t.co/GnxpmRFqzX
— BCCI (@BCCI) October 27, 2026
நியூசிலாந்து நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி, வெறும் 14 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து தனது சொந்த உலக சாதனையை முறியடித்தது. இளம் பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் ஆக்ரோஷமாக பேட் செய்து, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். டி20 சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு அணி அதிவேக அரைசதம் அடித்ததற்கான சாதனையை இந்தியா ஏற்கனவே படைத்திருந்தது. இருப்பினும், மூன்றாவது டி20 போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் அதைவிட வேகமான தொடக்கத்தைப் பெற்று ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினர். இந்தியா வெறும் 2.2 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. அதனை தொடர்ந்து, அதிரடி காட்டிய இந்த ஜோடி வெறும் 6 ஓவர்களில் 118 ரன்களை தொட்டது.
ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் 100 ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக 133 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, இந்தியா வெற்றிபெற 199 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
ALSO READ: ஒற்றை ஆளாக மிரட்டிய மிட்செல்.. இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு!
டி20 சர்வதேசப் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 100 ரன்கள் எடுத்த அணிகள்:
- 5 ஓவர்கள் – இந்தியா vs நியூசிலாந்து, வெலிங்டன், 2026
- 5.2 ஓவர்கள் – ருமேனியா vs செர்பியா, சோஃபியா, 2021
- 5.3 ஓவர்கள் – தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், செஞ்சுரியன், 2023
- 5.3 ஓவர்கள் – ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து, எடின்பர்க், 2024
- 5.5 ஓவர்கள் – ஜிம்பாப்வே vs காம்பியா, நைரோபி, 2024
- 5.5 ஓவர்கள் – இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா, ஓல்ட் டிராஃபோர்டு, 2025.