AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’ : சென்னை உள்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

Cyclone Alert at Ports : வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து, சென்னை உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’ : சென்னை உள்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Oct 2026 15:15 PM IST

சென்னை, அக்டோபர் 27 : வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து, சென்னை (Chennai) உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் அர்னாப் புயல் மையம் கொண்டுள்ளது. மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள இது, வடமேற்குத் திசையில் நகர்ந்து, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதியில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

முன்னதாக, இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அக்டோபர் 26, 2026 அன்று புயலாக உருவாகி, அக்டோபர் 28, 2026 அன்று அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைவிட வேகமாக அர்னாப் அக்டோபர் 27, 2026 இன்றே மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்க நிலையில் அர்னாப் புயலால் தமிழகத்துக்கு நேரடியான பாதிப்பு எதுவும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : மதுரை சிறுவன் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்.. நண்பனின் தாய் அதிரடியாக கைது.. திடுக் பின்னணி!!

இருப்பினும், புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவக்கூடும் என்பதை இந்த எச்சரிக்கை குறிக்கிறது. புயல் ஆந்திரத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் மழையின் தீவிரம் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 27, 2026 இன்று மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 28, 2026 மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும். பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அக்டோபர் 27, 2026 ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 32 – 33 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 26 – 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை.. முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்க திட்டம்!!

மீண்டும் உயரும் வெப்பநிலை

மழையின் தாக்கம் குறையும் நிலையில் வடதமிழகத்தில் வெப்பநிலை மீண்டும் உயரத் தொடங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 26, 27, 2026 ஆகிய 2 நாட்கள் மாநிலம் முழுவதும் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் 2026 அக்டோபர் 28 முதல் 30 வரை, வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி அதிகமாகப் பதிவாகலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow Us